Harold Das: இவரு ரோலக்ஸுக்கே அண்ணனா.. அதிரடியாக வெளியான அர்ஜுனின் ஹரோல்ட் தாஸ் க்ளிம்ப்ஸ்!
சென்னை: நடிகர் அர்ஜுன் சுதந்திர தினத்துடன் தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், லியோ படத்தில் இருந்து அவரது கேரக்டர் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது.
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் ஆண்டனி தாஸ் க்ளிம்ப்ஸ் வெளியான நிலையில், தற்போது அவரது சகோதரர் ஹரோல்ட் தாஸ் க்ளிப்ஸ் வெளியாகி உள்ளது.

சும்மாவே ஆக்ஷனில் அதகளம் செய்யும் நடிகர் அர்ஜுன் லோகேஷ் கனகராஜ் கேங்ஸ்டர் படத்தில் சொல்லவா வேண்டும் என்பது போல வெறித்தனம் காட்டி நடித்துள்ளார்.
62 வயசு அர்ஜுனா இது: நடிகர் அர்ஜுன் இன்று தனது 62வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சுதந்திர தினத்தன்று பிறந்த நடிகர் அர்ஜுன் தனது கையில் தேசியக் கொடியையே பச்சைக் குத்தி உள்ளார். போலீஸ் அதிகாரியாகவும், ராணுவ வீரராகவும் ஏகப்பட்ட படங்களில் சுதந்திர பற்றை வளர்த்த அர்ஜுன் வில்லனாகவும் சமீப காலமாக மிரட்டி வருகிறார். ஆக்ஷன் கிங் அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு தெறிக்கவிடும் க்ளிம்ப்ஸ் தற்போது வெளியாகி உள்ளது. அர்ஜுனின் அசுரத்தனமான நடிப்பை பார்த்தால் இவருக்கு 62 வயதா ஆகிறது என ரசிகர்கள் ஷாக் ஆகி வருகின்றனர்.

ஹரோல்ட் தாஸ்: ஆண்டனி தாஸின் தம்பியாக லியோ படத்தில் ஹரோல்ட் தாஸ் கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடித்துள்ளார் என தெரிகிறது. ஆரம்பத்தில் இருந்து இவருக்கும் லியோ விஜய்க்குமான ஆட்டம் தான் இருக்கும் என்றும் ஹரோல்ட் தாஸ் மரணத்திற்கு பிறகு தான் லியோ விஜய்யை எதிர்க்க ஆண்டனி தாஸ் வருவாரா? என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
ரோலக்ஸுக்கே அண்ணன்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை படு மாஸாக காட்டிய நிலையில், அதே போலவே தற்போது ஹரோல்ட் தாஸின் என்ட்ரியையும் தெறிக்க விட்டு இருக்கிறார். ஒரு நபரின் கையை வெட்டும் காட்சியில் நடித்திருந்தாலும், ரோலக்ஸுக்கே அண்ணனா இருப்பாரோ அர்ஜுன் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
பெரிய சம்பவம்: லோகேஷ் கனகராஜ் லியோ படத்தில் தான் ஒரு பெரிய சம்பவக்காரன் என்பதை நிரூபித்து விடுவார் என தெரிகிறது. ஒரு பவர்ஃபுல் வில்லன் எல்லாம் இல்லாமல், ஒட்டுமொத்தமாக வில்லன் கூட்டத்தையே பவர்ஃபுல்லாக வைத்து விட்டு விஜய்க்கு கொடுக்கப்போகும் மாச் தான் லியோ பாக்ஸ் ஆபிஸில் நடத்தப் போகும் வேட்டைக்கு உதவும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications