இசையமைப்பாளர் இமானின் பிறந்த நாள்.. அவர் இசையில் வெளியான 5 சூப்பர் ஹிட் மெலோடி பாடல்கள் இதோ!

சென்னை: இசையமைப்பாளர் இமானின் 37வது பிறந்த நாள் இன்று அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஹேப்பி பர்த்டே இமான் என்ற ஹாஷ்டேக்கும் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

தளபதி விஜய்யின் தமிழன் படத்தில் அறிமுகமான டி. இமான் கிட்டத்தட்ட தனது 18 வருட சினிமா அனுபவத்தில் பல பிளாக்பஸ்டர் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இவர் இசையில் உருவாகும் மெலோடி பாடல்கள் எப்போதுமே ஹிட் அடிக்க தவறியதில்லை.

இமானின் சூப்பர் ஹிட் மெலோடி பாடல்கள் குறித்து இங்கே காண்போம்.

கண்ணான கண்ணே

தல அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் படத்தில் இடம்பெற்றிருந்த "கண்ணான கண்ணே" பாடல் இசையமைப்பாளர் இமானின் சிறந்த பாடல்கள் வரிசையில் என்றைக்கும் இடம் பெற்றிருக்கும். மெலோடி பாடல்களையும் தாண்டி பாசத்தை வெளிப்படுத்தும் பாடல்களை இசையமைப்பதில் இமான் ஜகஜால கில்லாடி என்றே சொல்லலாம்.

குறும்பா

டிக் டிக் டிக் படத்தில் ஜெயம் ரவி மற்றும் அவரது மகன் ஆரவ்வின் பாசத்தை குறும்பா பாடல் மூலம் அழகாக வெளிக்காட்டி, ஒவ்வொரு தந்தை மகனுக்கும் உண்டான ஸ்பெஷல் பாடலாகவும் மாற்றியவர் இமான். குறும்பா பாடல் வரிகளை தேர்வு செய்ததிலும் இமானின் பங்கு அளப்பரியது.

உன் கூடவே பொறக்கணும்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் இமான் இசையில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் தான். காந்த கண்ணழகி பாட்டு குத்தாட்டம் போட வைத்தது. எங்க அண்ணன் பாட்டு தங்கைகளின் ஃபேவரைட் ஆனது. ஆனால், கண்களில் கண்ணீர் வர வைத்த பாடல் என்றால், அது உன் கூடவே பொறக்கணும் பாடல் தான்.

கண்டாங்கி

தளபதி விஜய்யின் ஜில்லா படத்திற்கும் இமான் தான் இசையமைத்திருந்தார். அந்த படத்தில் இடம்பெற்றிருந்த கண்டாங்கி கண்டாங்கி பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இன்றளவும் அந்த பாடலுக்கான மவுசு குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே படத்தில் இடம்பெற்றிருந்த வெரசா போறவளே பாடலும் ரசிகர்களின் ஃபேவரைட் மெலோடி தான்.

ஒவ்வொன்றாய் திருடுகிறாய்

விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளியான ஜீவா படத்தில் இடம்பெற்றிருந்த "ஒவ்வொன்றாய் திருடுகிறாய்" பாடல் காதலர்களுக்கான சிறந்த மெலோடியாக இன்றளவும் பல மியூசிக் சானல்களில் ஒளிபரப்பப்பட்டு இசை ரசிகர்களின் காதுகளை குளிர்வித்து வருகிறது. அந்த படத்தில் இடம்பெற்ற ஒருத்தி மேலே மையல் ஆனேன் பாடலும் அழகான மெலோடி பாடல் தான்.

தலைவர் 168

தலைவர் 168

தொடர்ந்து சூப்பர் ஹிட் பாடல்களை இசையமைத்து வரும் இமானுக்கு தலைவர் 168 படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் என நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வரும் படத்திற்கு அமர்களமான பாடல்களை இமான் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X