79 முடிந்து 80.. இளையராஜா பிறந்தநாள்.. அப்பாவுக்கு அப்படியொரு வாழ்த்து சொன்ன மகன் யுவன் சங்கர் ராஜா!
சென்னை: மேஸ்ட்ரோ, இசைஞானி என உலக இசை ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜாவுக்கு 79 வயது முடிந்து 80 வயது ஆரம்பித்துள்ளது.
பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா.
Recommended Video

இளையராஜா பிறந்தநாள்
1943ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி பண்ணை புரத்தில் பிறந்தவர் இளையராஜா. மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் பிறந்தநாளில் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என நினைத்த இளையராஜா அவர் மீதுள்ள பற்று காரணமாக ஜூன் 2ம் தேதி தனது பிறந்தநாளை பல ஆண்டுகளாக கொண்டாடி வருவது பலரும் அறிந்த ஒன்று தான். ஞானசேகரன் எனும் இயற்பெயரை சினிமாவுக்காக இளையராஜா என மாற்றிக் கொண்டார்.

சதாபிஷேகம்
79 வயது முடிந்து 80வது வயதில் அடியெடுத்து வைத்துள்ள இளையராஜா சமீபத்தில் தனது சதாபிஷேக விழாவை திருக்கடையூரில் கோலாகலமாக கொண்டாடினார். இளையராஜாவின் குடும்பம் மற்றும் அவரது தம்பி கங்கை அமரன் குடும்பம் என பலர் அந்த விழாவில் பங்கேற்று இளையராஜாவிடம் ஆசி பெற்றனர்.

சாதனைகளின் சிகரம்
இந்திய இசைத் துறையில் இளையராஜாவுக்கு நிகரான இசையமைப்பாளர் இல்லை என்று சொல்லும் அளவுக்கு 7000க்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். பல்வேறு மொழிகளிலும் பாடல்களை பாடியுள்ளார். 5 முறை தேசிய விருது வென்றுள்ளார். 2010ம் ஆண்டு பத்மபூஷன், 2018ல் பத்ம விபூஷன் என இந்தியாவின் மிக உயரிய விருதுகளை இந்திய அரசு இவரது இசை சேவைக்காக வழங்கி உள்ளது.

யுவன் வாழ்த்து
இளையராஜாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவரது மகன் யுவன் சங்கர் ராஜா, சிறு வயதில் இளையராஜா செம ஹேண்ட்ஸம் ஆக வெயிஸ்ட் கோட் மற்றும் பேன்ட் அணிந்து கால் மேல கால் போட்டு செம கெத்தாக அமர்ந்திருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து 'Happy Birthday Daddy' என செல்லமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கொண்டாடும் ரசிகர்கள்
தினம் தோறும் இளையராஜாவின் பாடல்களை கேட்காமல் தங்கள் பொழுதினை கடக்காத எத்தனையோ லட்ச ரசிகர்கள் இன்று அவரது பிறந்தநாள் முழுவதும் அவர் இசையமைத்து பாடிய பாடல்களை கேட்டும், இளையராஜாவை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்தும் அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை கூறி கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











