Deepika Padukone Net Worth: ரூ.100 கோடியில் பீச் ஹவுஸ்.. பர்த்டே கேர்ள் தீபிகா படுகோன் சொத்து மதிப்பு

மும்பை: இந்திய சினிமா உலகில் இன்றைக்கு அதிகம் விரும்பப்படும் நடிகையாக இருப்பவர் நடிகை தீபிகா படுகோன். திறமையான நடிகை மட்டும் இல்லாமால், தைரியாமான பெண் எனவும் பல சந்தர்ப்பங்களில் தன்னை வெளிக்காட்டியுள்ளார். 1989ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி பிறந்த தீபிகா படுகோன் இன்று தனது 39வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். இந்நிலையில் அவரது சொத்து மதிப்பு, அவரது நடிப்பில் அடித்து வெளியாகவுள்ள படங்கள், அவர் கமிட்டாகியுள்ள படங்கள் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

Deepika Padukone Deepika Padukone Birthday Deepika Padukone Net Worth

பாலிவுட்டின் குயின் என அழைக்கப்படும் தீபிகா படுகோன், கடந்த சில ஆண்டுகளாகவே பான் இந்தியா ஸ்டராக மாறிவிட்டார். அதிகப்படியான தெலுங்கு படங்களில், அதிலும் குறிப்பாக தெலுங்கில் உருவாகும் மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் தீபிகா படுகோனை எப்படியாவது புக் செய்து விடுகின்றார்கள். கடந்த ஆண்டில் நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான கல்கி 2898 கி.பி படத்தின் முதல் பாகத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். இரண்டாம் பாகம் 2026ஆம் ஆண்டு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இப்படியான நிலையில், சில தினங்களுக்கு முன்னர் பூஜை போட்டு தொடங்கப்பட்ட எஸ். எஸ். ராஜமௌலி இயக்கும் அடுத்த படத்தில் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

Deepika Padukone Deepika Padukone Birthday Deepika Padukone Net Worth

தீபிகா படுகோன்: இந்தி திரையுலகில் மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த இந்திய திரையுலகிலும் கால் பதிக்க தீபிகா திட்டம்போட்டு செயல்பட்டு வருகின்றார் என்ற பேச்சு திரைத்துறை வட்டாரத்தில் உள்ளது. அதேநேரத்தில் படத்தின் கதையில் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிக்க ஓ.கே. சொல்கின்றாராம் தீபிகா. இவர் நடிகர் ரன்வீர் சிங்கினை கடந்த 2018ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் இந்தியாவில் நடைபெறாமல், வெளிநாட்டில் நடைபெற்றது. இவர்களுக்கு கடந்த ஆண்டு மகள் பிறந்தார். தங்களது மகளுக்கு துவா படுகோன் சிங் என பெயர் வைத்துள்ளனர்.

Deepika Padukone Deepika Padukone Birthday Deepika Padukone Net Worth

சம்பளம்: தீபிகா படுகோனைப் பொறுத்தவரையில், கடந்த ஆண்டு இறுதியில் அவரது சொத்து மதிப்பு ரூபாய் 500 கோடிகள் என ஒரு ரிப்போர்ட் கூறுகின்றது. தீபிகா தற்போது பாலிவுட் சினிமாவில் மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த இந்திய சினிமாவில், அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக உள்ளார். இவர் ஒரு படத்தில் நடிக்க, படக்குழு எதிர்பார்க்கும் கால்ஷீட்டைப் பொறுத்து, ரூபாய் 15 கோடிகளில் இருந்து, ரூபாய் 20 கோடிகள் வரை சம்பளமாக வாங்குகின்றார். இதுமட்டும் இல்லாமல், விளம்பரங்களில் நடிக்க, ரூபாய் 7 கோடிகளில் இருந்து ரூபாய் 10 கோடிகள் வரை சம்பளமாகப் பெறுகின்றார் தீபிகா.

Deepika Padukone Deepika Padukone Birthday Deepika Padukone Net Worth

சொத்து மதிப்பு: சொத்தாக எடுத்துக் கொண்டால் 5 பெட்ரூம் கொண்ட, வீடு ஒன்றை ஆலிபக் கடற்கரையில் வாங்கியுள்ளனர். இதன் மதிப்பு ரூபாய் 22 கோடிகள் என கூறப்படுகின்றது. இது மட்டும் இல்லாமல் ஷாரூக்கானின் பீச் ஹவுஸ்க்கு பக்கத்திலேயே ரூபாய் 100 கோடிகள் மதிப்பில், ஆடம்பரமான பீச் ஹவுஸ் ஒன்றை வாங்கியுள்ளார். இது இல்லாமல், தீபிகா படுகோன் தனது சொந்த பயன்பாட்டிறாக மொத்தம் 6 சொகுசுக் கார்களை வாங்கியுள்ளார். இதில் பென்ஸ், ஆடி, ரேஞ்ச் ரோவர், போர்ஷு, மினி கூப்பர் உள்ளிட்ட கார்கள் அடங்கும். தனது மகளுடன் தனது பிறந்த நாளை முதல் முறையாக கொண்டாடும் தீபிகாவுக்கு திரைத்துறையினர் தொடங்கி ரசிகர்கள் வரை பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Deepika Padukone Deepika Padukone Birthday Deepika Padukone Net Worth

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X