இந்த புலி அப்பா புலியை விட அதிகமாவே பாயும்.. ஹேப்பி பர்த்டே துருவ் விக்ரம்.. குவியும் வாழ்த்துக்கள்!
சென்னை: சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரமின் 25வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
தனது முதல் படமான ஆதித்ய வர்மா படத்தின் மூலமாகவே தனது நடிப்புத் திறமையை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு உணர்த்தி விட்டார் துருவ் விக்ரம்.
சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நடிகர் துருவ் விக்ரமின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

25 வயது புயல்
நடிகர் சியான் விக்ரமை போலவே நடிப்பில் அசத்தி வருகிறார் அவரது மகன் துருவ் விக்ரம். 1995ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி நடிகர் விக்ரம் மற்றும் சைலஜா தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். இன்று தனது 25வது பிறந்தநாளை கொண்டாடி வரும் துருவ் விக்ரமுக்கு அவரது ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

ஆதித்ய வர்மா
இயக்குநர் பாலா இயக்கத்தில் அறிமுகம் ஆவார் என எதிர்பார்த்த நிலையில், வர்மா படம் சொதப்பியதாகக் கூறி, அர்ஜுன் ரெட்டி ரீமேக்கை மீண்டும் இயக்குநர் கிரிசாயா இயக்கத்தில் உருவாக்கி அதன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானர் துருவ் விக்ரம். முதல் படத்திலேயே வெறித்தனமாக நடித்து இருந்தார்.

பாயும் குட்டிப் புலி
அப்பா புலியை விட குட்டிப் புலி இன்னும் அதிகமாக பாயும் என்பதை நிரூபித்து வருகிறார் துருவ் விக்ரம். பல குரல்களில் பேசுவது, இசை மீது ஆர்வம், சிக்ஸ் பேக் வைத்தல் என சியான் விக்ரமுக்கு சற்றும் சளைக்காதவராய் அதிரடி காட்டி வருகிறார் இந்த குட்டிப் புலி துருவ் விக்ரம். சமீபத்தில் அவரது உடற்பயிற்சி புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி வைரலாகின.

பிறந்தநாள் டிபி
பிரபல நடிகர்களுக்கு அவர்களது ரசிகர்கள் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்டு சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்வது போலவே நடிகர் துருவ் விக்ரமுக்கு அவரது ரசிகர்கள் மற்றும் சியான் விக்ரம் ரசிகர்கள் காமன் டிபியை வெளியிட்டு டிரெண்ட் செய்தனர். நடிகை இவானா உள்ளிட்ட பிரபலங்களும் அதை ஷேர் செய்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

எப்படி இருக்கும்
ஆதித்யா வர்மா படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் யாருடன் படம் பண்ணப் போகிறார் என்ற ஹைப் எகிறியது. கடைசியாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சியான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து சியான் 60 படத்தில் நடிக்கப் போவதாக வெளியான அப்டேட் ரசிகர்களை உற்சாகமடைய செய்தது. சீக்கிரமே அந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிறந்தநாள் பரிசு
மேலும், விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ரசிகர்களுக்கு இன்று ஏதாவது ஸ்பெஷல் பிறந்தநாள் பரிசு இருக்குமா? என ரசிகர்கள் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். சியான் 60 படத்தில் இருந்து நிச்சயம் ஏதாவது சூப்பரான அப்டேட் வரும் என்றே ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











