twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கற்றது தமிழ் மூலம் தமிழை கற்றுக்கொடுத்த இயக்குநர் ராம்

    |

    சென்னை: கற்றது தமிழ் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ராம். பழகுவதற்கு மிக எளிமையானவர். இவரது இயக்கத்தில் வெளியான தங்க மீன்கள் திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்றதோடு, பல உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. இப்படிப்பட்ட மிக எளிமையான ஒரு மனிதருக்கு இன்று பிறந்த நாள். இவர் பல்லாண்டுகள் வாழ்ந்து நல்ல படைப்புகளை தமிழ் சினிமாவுக்கு தர வேண்டும். மேலும் மேலும் சாதிக்க வேண்டும் என்று ஃபில்மி பீட் வாழ்த்துகிறது.

    கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனிப்பாதையை வகுத்துக்கொண்டு அதில் வெற்றி நடைபோடும் இயக்குநர் ராமுக்கு இன்று 45ஆவது பிறந்தநாள். ராம் என்றால் எதார்த்தம். அவர் பேசுவதிலும் பழகுவதிலும் செயற்கை தனம் இல்லாத எதார்த்தம் மட்டுமே இருக்கும்.

    Happy Birthday director Ram : Ram 45th Birthday celebration

    தமிழ் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். அது மட்டும் இல்லாமல் தன்னுடைய எல்லா படங்களிலும் தமிழுக்காக, தமிழனுக்காக பேசக் கூடிய ஏதோ ஒரு விசயத்தை மறைமுகமாவோ அல்லது நெத்தியடியாகவோ காட்சிகள் அமைப்பார்.

    2007ஆம் ஆண்டு கற்றது தமிழ் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஒட்டு மொத்த தமிழ் சினிமாவும் யார் இந்த ராம் என்று திரும்பி பார்க்க வைத்தவர். 2013ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியான தங்க மீன்கள் திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்றதோடு, பல உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.

    எத்தனை விருதுகள் வாங்கினாலும் இவரது எதார்த்தமான பேச்சு மாறவே இல்லை. தங்க மீன்கள் படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். அடுத்ததாக 2017ஆம் ஆண்டு தரமணி திரைப்படம் இவரது இயக்கத்தில் வெளியானது. அதில் தைரியமான ஒரு திரைக்கதை, எதைப் பற்றியும் கவலைப்படாமல் உண்மைகளை உரக்கச் சொன்னார்.

    2019ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியான பேரன்பு திரைப்படம் உலக அரங்குகளில் பல பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றதன் மூலம் தமிழ் சினிமாவில் தொடர்ந்து தனிப் பாதையில் பயணித்து வருகிறார். இவர் போன்ற இயக்குநர்கள் மேலும் மேலும் தமிழ் சினிமாவுக்கு கிடைக்க வேண்டும், பல வித்தியாசமான முயற்சிகள் செய்ய வேண்டும்.

    இயக்குநர் ராமிடம் எல்லோரும் வியந்து பார்ப்பது, பல நேரங்களில் சென்னையில் தெருவோர டீ கடைகளில் மிக எளிமையாக டீ குடித்து விட்டு யாருடனாவது டூ வீலரில் பின்னால் உட்கார்ந்து பயணம் செய்வர். இப்படிப்பட்ட மிக எளிமையான ஒரு மனிதருக்கு இன்று பிறந்த நாள். இவர் பல்லாண்டுகள் வாழ்ந்து நல்ல படைப்புகளை தமிழ் சினிமாவுக்கு தர வேண்டும். மேலும் மேலும் சாதிக்க வேண்டும் என்று ஃபில்மி பீட் வாழ்த்துகிறது.

    English summary
    Ram made his directorial debut with 'Kattradhu Tamizh'. Very simply behavior person. His directorial debut, 'Thanga Meenkal', won three national awards and was screened at several global film festivals. Today is a birthday for such a simple man. He has lived for many years to give good works to Tamil cinema. FilmiBeat congratulates us on achieving more.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X