கண்ணில் அனல் தெறிக்க.. நடந்து வரும் சிம்பு.. பிறந்தநாளை முன்னிட்டு வெளியான பத்து தல போஸ்டர்!

சென்னை: நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு பத்து தல படக்குழு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்களில் சிம்புவின் ரசிகர்கள் #HBDSilamabarasanTR, பத்துதல, மாநாடு உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளை டிரெண்ட் செய்து வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

மாநாடு படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகர் சிம்பு ஏகப்பட்ட படங்களில் கமிட் ஆகி கடகடவென ஷூட்டிங்குகளை முடித்துக் கொடுத்து வருகிறார்.

டாக்டர் சிம்புவுக்கு பர்த்டே

டாக்டர் சிம்புவுக்கு பர்த்டே

குழந்தை நட்சத்திரம், லிட்டில் சூப்பர்ஸ்டார், எஸ்.டி.ஆர் என ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ள நடிகர் சிலம்பரசன் தற்போது டாக்டர் சிம்புவாக மாறி உள்ளார். சமீபத்தில் வேல்ஸ் பல்கலைக் கழகம் நடிகர் சிலம்பரசனை கெளரவித்து டாக்டர் பட்டத்தை வழங்கியது சிம்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

39வது பிறந்தநாள்

39வது பிறந்தநாள்

1983ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3ம் தேதி நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தருக்கும் உஷா ராஜேந்தருக்கும் மகனாக பிறந்த சிலம்பரசன் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருக்கும் நடிகர் சிம்பு இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

பத்து தல போஸ்டர்

பத்து தல போஸ்டர்

கண்ணில் அனல் தெறிக்க கேங்ஸ்டர் கெட்டப்பில் பத்து தல படத்தில் நடித்து வரும் சிம்புவின் அட்டகாசமான புதிய போஸ்டரை வெளியிட்டு பத்து தல படக்குழு நடிகர் சிம்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக் அந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

கன்னட ரீமேக்

கன்னட ரீமேக்

கன்னடத்தில் சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பில் மிரட்டலாக வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த மஃப்டி படத்தின் ரீமேக் தான் இந்த பத்து தல திரைப்படம். இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டரை 10 இயக்குநர்களை வைத்து வெளியிட்டனர். தொட்டி ஜெயா படத்துக்கு பிறகு ஒரு வித்தியாசமான சிம்புவை பத்து தல படத்தில் ரசிகர்கள் காண காத்திருக்கின்றனர்.

Recommended Video

பிரச்சனைய நான் பாத்துக்குறேன்! என்ன நீங்க பாத்துக்கோங்க! | STR emotional Speech | Maanadu PreRelease
குவியும் வாழ்த்துக்கள்

குவியும் வாழ்த்துக்கள்

நடிகர் சிலம்பரசனின் 39வது பிறந்தநாள் சமூக வலைதளங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் வாழ்த்தி வருகின்றனர். மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்களில் பிசியாக இருக்கும் சிம்பு அடுத்ததாக கொரோனா குமார் மற்றும் இன்னும் சில படங்களிலும் ஒப்பந்தமாகி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X