இசை மின்னல் ஹாரிஷ் ஜெயராஜுக்கு ஹேப்பி பர்த்டே.. ட்விட்டரில் குவிகிறது வாழ்த்து!

சென்னை: ஜனவரி மாதம் இசைப்பிரியர்களுக்கான மாதம் என்றே சொல்லலாம்.

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானை தொடர்ந்து இசை மின்னல் ஹாரிஷ் ஜெயராஜும் இந்த மாதத்தில் தான் பிறந்துள்ளார்.

ஹாரிஷ் ஜெயராஜின் 45வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

ட்விட்டரில் #HBDHarrisJayaraj என்ற ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டு ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இசை மின்னல்

கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான மின்னலே படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஷ் ஜெயராஜ், தனது முதல் படத்திலேயே மிகப்பெரிய இசை சிக்ஸரை அடித்தார். அந்த படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். அதிலும், அந்த வசீகரா பாடல் எல்லாம் வேற லெவல்.

செம்ம பீக்

செம்ம பீக்

ஏ.ஆர். ரஹ்மான் இருந்த காலத்திலேயே அவருக்கு அடுத்து வந்த ஹாரிஷ் ஜெயராஜ் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து செம்ம பீக்குக்கு சென்றார்.

மறக்கமுடியுமா

மின்னலே, மஜ்னு, 12பி, சாமுராய், லேசா லேசா, சாமி, கோவில், காக்க காக்க, செல்லமே, தொட்டி ஜெயா, உள்ளம் கேட்குமே, அந்நியன், கஜினி, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், உன்னாலே உன்னாலே, பீமா, தாம் தூம், வாரணம் ஆயிரம், அயன், எங்கேயும் காதல், கோ, 7ஆம் அறிவு, என்னை அறிந்தால், அநேகன் என ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் ஒரு பாடல் மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆல்பமே சூப்பர் ஹிட் ஆன நாட்களை யாராலும் மறக்க முடியாது.

கம்பேக்

கம்பேக்

சமீப காலமாக பல இளம் இசையமைப்பாளர்கள் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளதால், ஹாரிஷ் ஜெயராஜுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய படங்களில் இசையமைக்கும் வாய்ப்பு சற்று குறைந்துள்ளது. இந்த சோதனைகளை மீறி மீண்டும் இசை மின்னலாக ஹாரிஷ் ஜெயராஜ் கம்பேக் ஆவார்.

சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் படம்

சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் படம்

கடந்த ஆண்டு தேவ், காப்பான் படங்களுக்கு இசையமைத்த ஹாரிஷ் ஜெயராஜ், தற்போது லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் நடிக்கும் பிரம்மாண்ட படத்திற்கு இசையமைத்து வருகிறார். சமீபத்தில் பத்து கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு அந்த பாடல் எடுக்கப்பட்ட செய்திகள் வைரலானது குறிபிடத்தக்கது.

மெலோடி கிங்

தமிழ் ரசிகர்கள் முணுமுணுக்கும் பல மெலோடி பாடல்களை இசையமைத்தவர் ஹாரிஷ் ஜெயராஜ் தான். இந்த மெலோடி கிங்குக்கு ரசிகர்கள் மாஷ் அப் செய்து பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஹேப்பி பர்த்டே

ஹேப்பி பர்த்டே ஹாரிஷ் ஜெயராஜ் சார் என ரசிகர்கள் ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

எவர்க்ரீன் லிரிக்ஸ்

ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் உருவாகும் பாடல்களில் பாடல் வரிகளுக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் இருக்கும். அதேபோன்று, புதுமையான வரிகளும், ஒலிகளும் நிரம்பியிருக்கும் அதனை நினைவு படுத்துகிறது இந்த ரசிகரின் ட்வீட்.

துப்பாக்கி பிஜிஎம்

தளபதி விஜய் படங்கள் என்றாலே தற்போதெல்லாம் பி.ஜி.எம் தெறிக்கிறது. துப்பாக்கி படத்தில் அதனை பக்காவாக ஆரம்பித்து வைத்தது ஹாரிஷ் ஜெயராஜ் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X