For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அழகு தேவதை அனுஷ்காவுக்கு இன்று பிறந்தநாள் ...இணையத்தில் வைரலாகும் வாழ்த்து செய்தி!

  |

  சென்னை : 1981 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதியில் பிறந்த நடிகை அனுஷ்கா தற்போது 39 வயதை எட்டியுள்ளார் . தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு சினி மார்க்கெட்டிலும் நீங்காத இடம் பிடித்து இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் தான் அனுஷ்கா

  தமிழில் 2007ஆம் ஆண்டு வெளியான மாதவன் இரட்டை வேடத்தில் நடித்த ரெண்டு என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆன அனுஷ்கா பட வாய்ப்புகளை அதிகப்படுத்த மொபைலா மொபைலா என்ற பாடலில் படு கவர்ச்சியான உடையில் இளைஞர்கள் மனம் துடிக்கும் வகையில் ஒரு கவர்ச்சி ஆட்டம் போட்ட அனுஷ்காவுக்கு பின்பு மார்க்கெட் எகிறியது

  என்னதான் அனுஷ்கா தெலுங்கு நடிகை என்றாலும் அனுஷ்கா நடித்த படங்கள் தமிழில் பெரும் வரவேற்பை பெற்றது அருந்ததி, வேட்டைக்காரன் ,சிங்கம் 1 ,சிங்கம்2, சிங்கம்3 , இரண்டாம் உலகம் ,என்னை அறிந்தால், லிங்கா, தாண்டவம், வானம், பாகுபலி 1, பாகுபலி 2, ருத்ரமாதேவி என இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

  ரசிகர் பட்டாளமே

  ரசிகர் பட்டாளமே

  கோலிவுட்டில் த்ரிஷா, நயன்தாரா, காஜல் அகர்வால், தமன்னா, சமந்தா, கீர்த்தி சுரேஷ், ஸ்ருதி ஹாசன், அமலா பால், என பல முன்னணி நடிகைகள் இருந்தாலும் அனுஷ்காவுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது , ரஜினி , விஜய் , அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு போன்ற பெரிய நடிகர்களோடு இணைந்து நடித்த அனுஷகாவுக்கு கோலிவுட்டில் இன்று வரை தனி மார்க்கெட் உள்ளது என்பதை மறுக்க முடியாது...

  முக்கிய கதாபாத்திரத்தில்

  முக்கிய கதாபாத்திரத்தில்

  பெரும்பாலும் ராஜா காலத்து திரைப்படங்களில் அனுஷ்காவுக்கு முக்கிய கதாபாத்திரம் அமைவது இயல்பு அதற்கு காரணம் அனுஷ்காவின் கம்பீரமான நடிப்பும் அழகில் இளவரசி போல் இருப்பதே காரணம் . தமிழில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம் என்பது அனைவரும் அறிந்ததே .பல இயக்குனர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் மணிரத்தினம் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கிய வருகிறார் அந்த திரைப்படத்தில் நடிகை அனுஷ்கா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த திரைப்படம் 2021 ஆம் ஆண்டு திரைக்கு வரும் என்று சினிமா வட்டாரங்கள் பேசிக்கொள்கின்றனர்.

  டீச்சர்

  டீச்சர்

  அனுஷ்கா நடித்த நிறைய படங்கள் இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பதற்கு காரணம் அவருடைய உடல் இடை , அழகான நடை, கம்பீரமான தோற்றம் ,எளிமையான பேச்சு, வசீகரமான கண்கள். இவை அனைத்தும் ஒட்டு மொத்தமாக கலந்து ரசிகர்களை மிக எளிதில் வசியம் செய்யும் இந்த யோகா டீச்சர் என்றுமே இளமையாக இருப்பதற்கு மிக முக்கிய காரணம் யோகா தான் என்று பல பேட்டிகளில் கூறி உள்ளார்

  மணமகள்

  மணமகள்

  அனுஷ்கா நடித்த பல கதாபாத்திரங்களில் அவருக்கு என்று ஒரு தனி முத்திரை பதித்து விடுவார் . விக்ரமுடன் நடித்த தெய்வத்திருமகள் படத்தில் வக்கீலாக வரும் அனுஷ்கா அன்பிற்காக ஏங்கும் ஒரு தந்தை மகள் பாசத்திற்கு நடுவே இருக்கும் உன்னதமான உணர்வுகளை புரிந்து கொண்டு அற்பதமாக தன் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் . மற்றொரு புறம் அனுஷாகாவிற்கு எப்போ திருமணம் என்று தீர்மனமாக தெரியாததால் பல ரசிகர்கள் கேள்விகள் கேட்டு குடைந்து கொண்டு இருக்கின்றனர் .அடுத்த பிறந்த நாளுக்குள் கண்டிப்பாக மணமகள் கோலத்தில் அனுஷ்காவை பார்க்கலாம் என்பது ரசிகர்களின் நம்பிக்கை

  வாழ்த்துக்கள்

  வாழ்த்துக்கள்

  ஸ்லிம் அண்ட் பிட்டாக மட்டும் இல்லாமல் அனுஷ்கா பல படங்களில் கொஞ்சம் புஷ்டியாக கொழு கொழு என்ற தோற்றத்துடன் பல ரசிகர்களை ஆச்சர்ய பட வைத்து மகிழ்வித்தார் . மிகவும் குண்டான ஒரு பெண்ணாக இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் நடித்து பல பாராட்டுகளை பெற்றார். இந்த அழகு சுந்தரிக்கு இன்று பிறந்த நாள் என்று தெரிந்து பல பிரபலங்கள் தொடர்ந்து வாழ்த்து கூறிய வண்ணம் உள்ளனர்.

  English summary
  Happy Birthday Hot and Sweet Anushka Shetty
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X