Sridevi ஒவ்வொரு நிமிஷமும் மிஸ் பண்ணுகிறேன்: ஸ்ரீதேவி பற்றி போனி கபூர் உருக்கம்
Recommended Video
மும்பை: மனைவி ஸ்ரீதேவியின் பிறந்தநாளை முன்னிட்டு போனி கபூர் உருக்கமான ட்வீட் போட்டுள்ளார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் 56வது பிறந்தநாள் இன்று. கடந்த ஆண்டு நாத்தனார் மகனின் திருமணத்தில் கலந்து கொள்ள துபாய் சென்ற ஸ்ரீதேவி குளியல் தொட்டி நீரில் மூழ்கி உயிர் இழந்தார்.
இந்நிலையில் ஸ்ரீதேவியின் பிறந்தநாளை முன்னிட்டு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அவரை பற்றி ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்கள்.
போனி கபூர்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜான், ஒவ்வொரு நிமிடமும் உன்னை மிஸ் பண்ணுகிறேன். தொடர்ந்து எங்களை வழிநடத்தவும். எப்பொழுதுமே எங்களுடன் இருப்பாய் #Sridevi என்று ஸ்ரீதேவியின் கணவரும், பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர் ட்வீட் செய்துள்ளார்.
அனில் கபூர்
ஸ்ரீதேவியை ஒவ்வொரு நாளும் மிஸ் பண்ணுவதாக போனி கபூரின் தம்பியும், பாலிவுட் நடிகருமான அனில் கபூர் தெரிவித்துள்ளார். அனில் கபூரின் மனைவி சுனிதாவும் ஸ்ரீதேவி நினைவாக சமூக வலைதளத்தில் போஸ்ட் போட்டுள்ளார்.
மகள்
ஸ்ரீதேவியின் பிறந்தநாளையொட்டி அவரின் மூத்த மகளும், நடிகையுமான ஜான்வி கபூர் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். தன் அம்மாவுக்கு பிடித்த உடையான பாவாடை, தாவணியில் ஜான்வி கோவிலுக்கு சென்றுள்ளார். மேலும் அம்மாவை மிஸ் பண்ணுவதாக தெரிவித்துள்ளார்.
தல ரசிகர்கள்
நேர்கொண்ட பார்வை படம் உருவாக ஸ்ரீதேவி தான் காரணம். இந்நிலையில் அஜித் ரசிகர்கள் ஸ்ரீதேவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அஜித்தை வைத்து தனது கணவர் தமிழில் ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் அதுவும் அந்த படம் சமூக அக்கறை உள்ள படமாக இருக்க வேண்டும் என்று விரும்பியது ஸ்ரீதேவி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீதேவி டிரெண்டிங்
ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் ஸ்ரீதேவிக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்வதால் #Sridevi என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. ஸ்ரீதேவியை நினைவுகூர்ந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என்று ஸ்ரீதேவியின் ட்விட்டர் கணக்கில் இருந்து ட்வீட் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











