தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா.. ரிலீசானது ஜெயம் ரவியின் பூமி ஃபர்ஸ்ட் சிங்கிள்!

சென்னை: நடிகர் ஜெயம் ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு, பூமி படக்குழு அந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை தற்போது வெளியிட்டுள்ளது.

இயக்குநர் லக்‌ஷ்மணன் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால், சரண்யா பொன்வண்ணன் நடிப்பில் உருவாகி உள்ள படம் பூமி.

இந்த படத்தின் இசையமைப்பாளர் இமான் இசையில், அனிருத் குரலில் வெளியாகியுள்ள "தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா" பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அடுத்த ஆளப் போறான் தமிழன்

அடுத்த ஆளப் போறான் தமிழன்

தளபதி விஜய்யின் ஆளப் போறான் தமிழன் பாட்டை தொடர்ந்து, தமிழ் மொழியின் பெருமையை பறைசாற்றும் பாடலாக ஜெயம் ரவியின் பூமி படத்தில் இடம்பெற்றுள்ள இந்த "தமிழன் என்று சொல்லடா" பாடல் இடம்பெற்றிருக்கிறது. பாடலின் ஒவ்வொரு வரியும் தமிழை சிறப்பிக்கும் விதமாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

அனிருத் குரலில்

அனிருத் குரலில்

பொதுவாகவே இசையமைப்பாளர் அனிருத் மற்ற இசையமைப்பாளர்கள் இசையில் பாடலை பாடுகிறார் என்றால், அந்த பாடலுக்காக எந்த பணமும் வாங்க மாட்டார். மேலும், அவர் பாடிக் கொடுக்கும் பாடல்கள் அந்த படத்தில் வேற லெவலில் ஹிட் அடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இமான் கூட்டணியில் ஏகப்பட்ட பாடல்களை பாடியுள்ள அனிருத், பூமி படத்திற்காக பாடிய இந்த பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

பிறந்தநாள் பரிசு

பிறந்தநாள் பரிசு

நடிகர் ஜெயம் ரவியின் 40வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது 25வது படமான பூமி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக வெளியாகி உள்ளது. ஜெயம் ரவியின் கரிஷ்மா பாடல் முழுவதும் ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸ் கொடுக்கும் விதமாகவே அமைந்துள்ளது. பிருந்தா மாஸ்டர் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.

எப்போ, எப்படி

எப்போ, எப்படி

மே 1ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நடிகர் ஜெயம் ரவியின் பூமி படத்தின் ரிலீசும் கொரோனா லாக்டவுன் காரணமாக தள்ளிப் போயுள்ளது. சூரரைப் போற்று படத்தை போல ஒடிடியில் வெளியாகுமா? அல்லது மாஸ்டர், ஜகமே தந்திரம் படங்களை போல தியேட்டரில் வெளியாகுமா என்பதை அறிய ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர். தியேட்டரில் தான் பூமி ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X