Nayanthara Net Worth: ஹாப்பி பர்த்டே லேடி சூப்பர்ஸ்டார்.. நயன்தாராவின் சொத்து மதிப்பு இவ்வளவா?

சென்னை: சாதாரண டிவி சேனல் விஜேவாக இருந்து இன்று தென்னிந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டாராக மாறியுள்ள நடிகை நயன்தாராவின் 38வது பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பிரபல நடிகர்களுடன் காதல் முறிவுகள், திருப்பதி கோயிலில் செருப்பு காலுடன் சென்றது, வாடகைத்தாய் சர்ச்சை என ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கினாலும், தனது விடாமுயற்சியால் தொடர்ந்து சினிமா இண்டஸ்ட்ரியில் நம்பர் ஒன் இடத்தில் கெத்தாக அமர்ந்து வருகிறார் நயன்தாரா.

2 குழந்தைகளுக்கு அம்மாவாக மாறியுள்ள நயன்தாராவின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு எத்தனை கோடிகள், நயன்தாராவின் பங்களாக்கள், சம்பளம் குறித்து இங்கே விரிவாக அலசுவோம்..

டயானா மரியம் குரியன் டு நயன்தாரா

டயானா மரியம் குரியன் டு நயன்தாரா

1984ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி பெங்களூருவில் மலையாள குடும்பத்தில் பிறந்தவர் டயானா மரியம் குரியன். அப்பா ஏர்ஃபோர்ஸில் வேலை செய்து வந்ததால், பல மாநிலங்களில் இவர் படிக்க வேண்டிய சூழல் உருவானது. கடைசியாக கேரளாவில் அவர்கள் செட்டில் ஆக மாடலிங் மற்றும் விஜேவாக பணிபுரிந்து வந்த நயன்தாராவுக்கு மனசின்னக்கரே படத்தின் மூலம் நடிகையாகும் வாய்ப்பு கிடைத்தது.

38 வயசாகிடுச்சு

38 வயசாகிடுச்சு

லேடி சூப்பர்ஸ்டார் என தென்னிந்தியாவே கொண்டாடி வரும் நடிகை நயன்தாராவுக்கு இன்று 38வது பிறந்தநாள். 6 ஆண்டுகளுக்கு முன்பாகவே விக்னேஷ் சிவனை ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டாலும், சமீபத்தில் தான் அதிகாரப்பூர்வமாக அனைவரும் அறியும் வகையில் தனது திருமணத்தை நயன்தாரா ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்கள் சூழ செய்து கொண்டார்.

இரட்டை குழந்தைகள்

இரட்டை குழந்தைகள்

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனார்கள். அந்த அறிவிப்புக்கு பின்னர், திருமணம் ஆகி 4 மாதத்தில் எப்படி ட்வின்ஸ் என சர்ச்சைகள் வெடித்தன. பின்னர், வாடகைத்தாய் முறையில் மோசடி செய்யப்பட்டதா? என்றும் விவாதிக்கப்பட 6 ஆண்டுகளுக்கு முன்பே இருவரும் திருமணம் செய்து கொண்டோம் என்றும் அனைத்தும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்றும் நயன்தாரா தரப்பும் அரசு தரப்பும் தெரிவித்தது.

10 கோடி சம்பளம்

10 கோடி சம்பளம்

நடிகை நயன்தாரா மட்டும் தான் தென்னிந்தியாவிலேயே அதிகபட்சமாக 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஹீரோயினாக திகழ்கிறார். பாலிவுட்டில் கூட தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட சில பிரபல நடிகைகள் மட்டுமே இத்தகைய சம்பளத்தை வாங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா சொத்து

நயன்தாரா சொத்து

நடிகை நயன்தாராவின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 165 கோடி ரூபாய் என வணிக செய்தி நிறுவனங்கள் கணக்கிட்டுள்ளன. ஹைதராபாத்தின் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் 2 சொகுசு பங்களாக்களும், சென்னையில் 4 சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளும் நயன்தாராவுக்கு உள்ளது எனக் கூறுகின்றனர். மேலும், நடிகை நயன்தாராவுக்கு தனியாக ஒரு பிரைவேட் ஜெட்டும் உள்ளது.

கணவன் மனைவி சொத்து

கணவன் மனைவி சொத்து

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். நயன்தாராவின் 165 கோடி சொத்துடன் விக்னேஷ் சிவன் சொத்தையும் சேர்த்தால் மொத்த சொத்து 215 கோடி ரூபாய் சொத்துக்கு சொந்தக்காரர்களாக இருவரும் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

கோலிவுட் முதல் பாலிவுட் வரை

கோலிவுட் முதல் பாலிவுட் வரை

கோலிவுட்டில் நயன்தாரா நடிப்பில் விரைவில் கனெக்ட் படம் வெளியாக காத்திருக்கிறது. மலையாளத்தில் கோல்டு திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகிறது. பாலிவுட்டில் ஷாருக்கான் உடன் ஜவான் திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கில் சமீபத்தில் சிரஞ்சீவி மற்றும் சல்மான் கான் உடன் இணைந்து காட்ஃபாதர் படத்தில் நடித்திருந்தார் நயன்தாரா. வாழ்வில் பல சோதனைகள் வந்தாலும், அதை சாதனையாக்கி வீர நடை போட்டு வரும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X