வீறு கொண்டு எழுந்து வாங்க லிங்கு!- பிறந்த நாளில் குவிந்த வாழ்த்துகள்

By Shankar

மீண்டும் வீறு கொண்டு எழுந்து வாருங்கள் என இயக்குநர் லிங்குசாமியை வாழ்த்தியுள்ளனர் திரையுலகினர்.

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் லிங்குசாமி.

மகா பிரபு படத்தில் ஏ வெங்கடேஷின் உதவி இயக்குநராக திரையுலகுக்கு வந்த லிங்குசாமி, ஆனந்தம் என்ற வெற்றிப் படம் மூலம் இயக்குநரானார்.

Happy birthday Lingusamy

தொடர்ந்து ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை போன்ற வெற்றிப் படங்களைத் தந்தார்.

சமீபத்தில் அவர் இயக்கி வெளிவந்த படம் அஞ்சான். சூர்யா நடித்த இந்தப் படம் சறுக்கலாக அமைந்தது. இது லிங்குசாமிக்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்தது.

இதனால் அடுத்த படமான எண்ணி ஏழு நாள் படத்தின் திரைக்கதையை இன்னும் கவனமாக உருவாக்கி வருகிறார். சமீபத்தில் நடந்த ஒரு விழாவில், அஞ்சான் தோல்வி தனக்கு நிறைய பாடங்களைக் கற்றுத் தந்தகாகக் கூறினார்.

இன்று தனது 47வது பிறந்த நாளை கொண்டாடும் அவர் மீண்டும் வீறுகொண்டு எழுந்து தனது திறமையை நிரூபிப்பார் என திரையுலக பிரபலங்கள் ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் வாழ்த்தியுள்ளனர்.

ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் திகழும் லிங்குசாமி, தனது சகோதரர் சுபாஷ் சந்திரபோசுடன் இணைந்து கமல்ஹாசனின் உத்தமவில்லன், சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன், பன்னீர் செல்வம் இயக்கும் நான்தான் சிவா உள்பட 5 படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.

வெற்றி தோல்விகளைத் தாண்டி லிங்குசாமி போன்ற தயாரிப்பாளர் - இயக்குநர் நிலைத்து நிற்பதுதான் தமிழ் சினிமாவுக்கும் அதன் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கும் நல்லது!

பிறந்த நாள் வாழ்த்துகள் இயக்குநர் லிங்குசாமி அவர்களே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X