Don't Miss!
- News
இந்து மக்கள் கட்சியின் "சனாதன எழுச்சி பேரணி".. அனுமதிக்க முடியாது.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- Lifestyle
இந்த சூப்பர் உணவுகள் தாமதமான உங்கள் மாதவிடாயை சில மணி நேரங்களில் வரவைக்குமாம்...!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
அந்தர் பல்டியா இருக்கே.. விவாகரத்து செய்து விட்டு.. இப்போ கடைசி வரை காதலிப்பேன் என கதை விடும் கிம்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: விவாகரத்து செய்து விட்டால் என்ன காதலிக்கக் கூடாது என ஏதாவது சட்டம் இருக்கிறதா? என்ன?
அப்படி கேளுங்க என கிம் கர்தாஷியன் நிச்சயம் சொல்வார் என்றே தோன்றுகிறது.
என்னா
ஷாட்யா...
தோனிக்கே
டஃப்
கொடுக்கும்
நிவேதா
தாமஸ்..
ஜஸ்ட்
மிஸ்ல
மண்டை
பொளந்திருக்கும்!
கன்யே வெஸ்ட்டை விவாகரத்து செய்த கிம் கர்தாஷியன், கணவர் பிறந்தநாளுக்கு பதிவிட்டுள்ள இன்ஸ்டா போஸ்ட் தான் இப்போது உலகளவில் பலரையும் ஷாக் ஆக்கி உள்ளது.

கணவரை பிரிந்த கிம்
சர்வதேச மாடல் அழகியான கிம் கர்தாஷியன் தனது கணவர் கன்யே வெஸ்ட்டை விவாகரத்து செய்து கொண்டார். பிரபல ராப் பாடகர் கன்யே வெஸ்ட் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் பதவிக்காக போட்டியிடப் போவதாக அறிவித்த நிலையில் இருவருக்கும் இடையே சண்டை வெடித்தது.

கருவை கலைக்க
கிம் கர்தாஷியன் - கன்யே வெஸ்ட் தம்பதியினருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். மூத்த குழந்தை நார்த் கருவுற்று இருக்கும் போது அந்த குழந்தையை கருவிலே அழிக்க நினைத்ததாகவும் தனது மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கன்யே வெஸ்ட் பேசியது கிம் கர்தாஷியன் மனதை ரொம்பவே காயப்படுத்தியது.

காருக்குள் கண்ணீர்
அந்த சம்பவத்திற்கு பிறகு கிம் கர்தாஷியன் மற்றும் கன்யே வெஸ்ட் விவாகரத்து செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் கணவருடன் காருக்குள் பேச்சுவார்த்தை நடத்திய கிம் கர்தாஷியன் கண்ணீர் விட்டு அழுத புகைப்படங்கள் வைரலாகின. ஆனால், அதன் பிறகு தான் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

கணவருக்கு வாழ்த்து
கணவர் கன்யே வெஸ்ட்டை விவாகரத்து செய்த நிலையில் இருவரும் பேச்சுவார்த்தை கொள்ளாமல் இருந்து வந்தனர். இந்நிலையில், ஜூன் 8ம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய கன்யே வெஸ்ட்டுக்கு குழந்தைகள் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

கடைசி வரை காதல்
மேலும், அந்த போட்டோவுடன் கிம் கர்தாஷியன் போட்ட கேப்ஷன் ஒட்டுமொத்த உலக ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. "Happy Birthday Love U for Life" என கேப்ஷன் போட்டு கடைசி வரை கன்யேவை தான் காதலித்துக் கொண்டே இருப்பேன் என என்பதை உணர்த்தி உள்ளார்.

மீண்டும் இணைவார்களா
கிம் கர்தாஷியன் இப்படியொரு போஸ்ட் போட்டதை பார்த்த ரசிகர்கள் ரொம்பவே ஷாக் ஆகி உள்ளனர். மீண்டும் இருவரும் இணைந்து வாழ்வார்களா? என்கிற கேள்வியையும் எழுப்பி உள்ளனர். மேலும், கிம்முக்கு கன்யே மீது காதல் உள்ளது என்றும் கன்யே தான் கிம்மை புறக்கணித்து வருகிறார் என்றும் இந்த பிரிவுக்கே அவர் தான் காரணம் என்றும் கூறி வருகின்றனர்.