Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பாகுபலி பார்த்தோமே.. நல்லா ஞாபகமிருக்கு.. நெகிழ்ந்த விவேக்.. மகிழ்ந்த கார்க்கி!
சென்னை : கவிப்பேரரசு வைரமுத்து பெற்றொடுத்த வைரம் மதன் கார்க்கி. இளம் கவிஞர்களை எப்போதும் போற்றிக்கொண்டாடும் தமிழ் சினிமாவுக்கு மதன் கார்க்கி ஒரு வரப்பிரசாதமாக கிடைத்தார்.
இவர் இன்று தனது 41வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள் அவரது நண்பர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சம்மரில்
வெளிவரவுள்ள
விஜய்சேதுபதியின்
4
படங்கள்!
பாடலாசிரியர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில், திரையரங்கு சென்று பாகுபலி படம் பார்த்த அனுபவத்தையும் கிளி மொழிக்கு கிடைத்த கைத்தட்டல்களை என்றும் நான் மறக்கவே மாட்டேன் என்று கூறி அன்பு சகோதருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.

ஏராளமான ரசிகர்கள்
பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், ஆராய்ச்சி நிபுணர், மென்பொருள் பொறியாளர் என அனைத்து துறைகளிலும் தனது கால்தடத்தைப்பதித்து சாதித்துக்காட்டி உள்ளார். மதன் கார்க்கி. புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா என்பதை பல பாடல்களில் நிருபித்துள்ளார் கார்க்கி. ஆற்றல் மிக்க எழுத்துக்களால் ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்துள்ளார்.

பாடலுக்கு கிடைத்த வெற்றி
எந்திரன் படத்தில் வரும் இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ...' என்று எழுதியது பிரமாண்டப்படுத்தி இருப்பார். இப்பாடலுக்கான வெற்றி அதில் நாம் பயன்படுத்தும் சொற்களின் புதுமையில் இருக்கிறது என்பதை, கார்க்கி தனது பாடல்கள் அனைத்திலும் நிரூபித்துவருகிறார்.

புது மொழி
பாகுபலி படத்தில் அனைவரும் மெய்மறந்து ரசித்து என்ன பாஷடா இது என வியந்து பார்க்க வைத்த காளக்கேயர்கள் பேசிய மொழிக்கு கிளிக்கி மொழி என தனி அடையாளத்தை கொடுத்து. அந்த மொழியை இலக்காண முறைப்படி வடிவமைத்த பெருமைக்குரியவர் கார்க்கி.

கைத்தட்டல் நினைவிருக்கிறது
கார்க்கி இன்று தனது 41வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் அவருக்கு ரசிகர்கள் திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில், பாடலாசிரியரும் கார்க்கியின் நண்பரான விவேக், வெளியிட்டுள்ள பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியில், பாகுபலி படத்தை உங்களுடன் திரையரங்கில் பார்தேன். கிளிக்கி மொழிக்கு கிடைத்த கைத்தட்டல் இன்னும் நினைவிருக்கிறது. அவரை நினைத்து பெருமை அடைகிறேன் அவர் ஒரு அற்புதமான பாடலாசிரியர் மற்றும் எழுத்தாளர் என்று கூறியுள்ளார்.
சூடான சுவையான சினிமா மற்றும் தொலைக்காட்சி செய்திகளுக்கு பிலிமிபீட் தமிழ் இணையதளத்தின் டெலிகிராம் சானலுடன் இணைந்திருங்கள்.