மலையாள திரையுலகின் மகா நடிகன் மோகன்லால்.. சித்ரா முதல் சிரஞ்சீவி வரை குவியுது பிறந்தநாள் வாழ்த்து!

திருவனந்தபுரம்: மலையாள திரையுலகின் மகா நடிகன் மோகன்லாலின் 61வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

Recommended Video

Drishyam 2 | Poster Pakiri Review | Filmibeat tamil

5 முறை தேசிய விருதுகளை வென்ற நடிகர் மோகன்லாலுக்கு ஒட்டுமொத்த திரையுலகமும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மோகன்லால் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான திரிஷ்யம் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

லாலேட்டா

லாலேட்டா

1960ம் ஆண்டு மே 21ம் தேதி கேரளாவின் எலாந்தூரில் பிறந்தவர் மோகன்லால். திருவனந்தபுரம் அரசு பள்ளியில் பயின்று வளர்ந்த மோகன்லால் 1977 மற்றும் 1978ம் ஆண்டு கேரள அரசின் மல்யுத்த வீரராக திகழ்ந்தார். அதே ஆண்டு திரனோட்டம் எனும் மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான லாலேட்டன் இன்று தனது 61வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

கம்ப்ளீட் ஆக்டர்

கம்ப்ளீட் ஆக்டர்

பாடகி சின்னக் குயில் சித்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் மோகன்லாலை முழுமையான நடிகர் எனக் குறிப்பிட்டு வாழ்த்தி உள்ளார். மேலும், மோகன்லால் குடும்பத்தை சேர்ந்த சுச்சி, அப்பு மற்றும் மாயாவுடன் இணைந்து நீண்ட காலம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்றும் வாழ்த்தி உள்ளார்.

ராம்சரண் வாழ்த்து

ராம்சரண் வாழ்த்து

இயக்குநர் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்து வரும் நடிகர் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண் தனது ட்விட்டர் பக்கத்தில் மோகன்லால் உடன் எடுத்துக் கொண்ட சூப்பரான த்ரோபேக் போட்டோவை போட்டு ஹேப்பி பர்த்டே லாலேட்டன் என வாழ்த்தி உள்ளார்.

லூசிபர் முதல் நாள் ஷூட்

லூசிபர் முதல் நாள் ஷூட்

மலையாள நடிகர் பிருத்விராஜ் நடிகர் மோகன்லால் உடன் லூசிபர் படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கின் போது எடுத்துக் கொண்ட போட்டோவை பதிவிட்டு கொரோனா பரவல் மட்டும் இல்லையென்றால் இந்நேரம் எம்புரான் படத்தின் படப்பிடிப்பை அவருடன் இணைந்து நடத்திக் கொண்டு இருப்பேன் என தெரிவித்துள்ளார். மேலும், ஹேப்பி பர்த்டே ஸ்டீபன், ஹேப்பி பர்த்டே ஆப்ராம் என லாலேட்டாவின் கதாபாத்திர பெயர்களை குறிப்பிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

சிரஞ்சீவி வாழ்த்து

சிரஞ்சீவி வாழ்த்து

தெலுங்கு திரையுலகின் மெகாஸ்டார் நடிகர் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் நடிப்பின் பவர்ஹவுஸ் என்றும் மனித நேயத்தின் ரத்தினக் கல் என்றும் மோகன்லாலை பாராட்டி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், பல சினிமா பிரபலங்களும் நடிகர் மோகன்லாலை வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X