ஹேப்பி பர்த்டே முதலாளி.. உதயநிதி ஸ்டாலினை வருஷா வருஷம் மறக்காத சந்தானம்!
Recommended Video
சென்னை: உதயநிதி ஸ்டாலினின் 42வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. ரசிகர்கள், பிரபலங்கள் என உதயநிதியை வாழ்த்தி வரும் நிலையில், நடிகர் சந்தானம் ஹேப்பி பர்த்டே முதலாளி என ட்வீட் போட்டு வாழ்த்தியுள்ளார்.
உதயநிதி - சந்தானம் காம்பினேஷன் என்றாலே காமெடி கலக்கலாக ஒரு காலத்தில் இருந்தது.
சந்தானம் ஹீரோவாக நடிக்க வந்த பிறகு, வெள்ளித்திரையில் அந்த காம்பினேஷனை பலரும் மிஸ் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தனது நண்பேன்டாவை மறக்காத சந்தானம் உதயநிதி ஸ்டாலினுக்கு தனது ஸ்டைலில் வாழ்த்து கூறியுள்ளார்.

காமெடி காம்பினேஷன்
ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல், நண்பேன் டா என தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் மற்றும் சந்தானத்தின் காமெடி திரையரங்குகளில் ரசிகர்களை சிரிக்க வைத்து வந்தது.

வேற ரூட்
சந்தானம் ஹீரோவாக மாறிய பின்னர், உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரு கையே உடைந்து போனது போல ஆனது. ஆனால், அதுவும் நல்லது தான் என நினைத்து நடிக்க ஆரம்பித்த உதயநிதி கொஞ்சம் கொஞ்சமாக காமெடி படங்களை விடுத்து மனிதன், நிமிர், சைக்கோ என சீரியஸ் படங்களை பண்ண ஆரம்பித்துள்ளார்.

சைக்கோ
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் நடித்துள்ள சைக்கோ படம் உதயநிதி ஸ்டாலினுக்கு மிகப்பெரிய படமாக அமைந்துள்ளது. இசைஞானி இளையராஜா இசையில் அண்மையில் வெளியான உன்னை நெனச்சு பாடல் இசைப்பிரியர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
ஹேப்பி பர்த்டே முதலாளி
சந்தானம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் தங்களுக்குள் முதலாளி என்ற அடைமொழியை வைத்து மாறி மாறி கூப்பிட்டுக் கொள்வது வழக்கம். உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளான இன்று, அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சந்தானம், "Birthday wishes Udhaystalin Mudhalaali" எனக் கூறியுள்ளார்.
வருஷா வருஷம்
நீங்க முதலாளின்னு சொல்லுவீங்கன்னு நான் நெனச்சேன் சொல்லிட்டீங்க, போன வருஷமும் இதத்தான் சொன்னீங்க என ஒரு ரசிகர் கமெண்ட் செய்ய, அவர் வருஷா வருஷம் அப்படி தான் சொல்லுவாரு, ரெண்டு பேரும் அந்த வார்த்தையை யூஸ் பண்ணுவாங்கன்னு இன்னொரு ரசிகர் அந்த ரசிகருக்கு பதில் அளித்துள்ளார்.
டகால்டி அப்டேட்
உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்ல ட்விட்டருக்கு வந்த சந்தானத்தை ரவுண்டு கட்டிய ரசிகர்கள், டகால்டி அப்டேட்டை கேட்டு அன்பு தொல்லை கொடுத்து வருகின்றனர்.
அவங்களும் சொல்லிட்டாங்க
சந்தானம் உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்லும் போது, ஹன்சிகா சொல்லாமல் இருப்பாங்களா? அவங்களும் ஹேப்பி பர்த்டே மச்சா என தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லிருக்காங்க.


Click it and Unblock the Notifications











