Mumtaj Net Worth: பிக் பாஸுக்கு பிறகு ஆளே காணாம போன மும்தாஜ்.. இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா?
சென்னை: டி. ராஜேந்தரின் மோனிசா என் மோனாலிஸா படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை மும்தாஜ் இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
"மலை மலை மருதமலை", "கட்டிப்புடி கட்டிப்புடிடா" என கவர்ச்சி ஆட்டம் போட்டு ஏகப்பட்ட ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த மும்தாஜ் தற்போது குடும்பமே கோயில் என ஆளே மாறிவிட்டார்.

19 வயதில் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வந்த மும்தாஜ் பல ஆண்டுகள் சம்பாதித்த ஒட்டுமொத்த சொத்து மதிப்பு குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..
மும்தாஜ் பிறந்தநாள்: 1980ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி பிறந்த மும்தாஜ் சிறுவயதில் மும்பையில் தான் வளர்ந்தார். நடிகை ஸ்ரீதேவி தான் இவருக்கு மிகப்பெரிய ரோல் மாடலே. ஸ்கூல் படிக்கும் போதே தனது அறை முழுக்க ஸ்ரீதேவியின் போட்டோக்களைத் தான் ஒட்டி வைத்திருப்பேன் என அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

மும்பையில் உள்ள ஃபிலிமிஸ்தான் ஸ்டூடியோவை பள்ளி வாகனம் கடக்கும் போதெல்லாம் கொக்குப் போல இவரது கழுத்து திரும்பி நடிகர்கள் மற்றும் நடிகைகள் யாராவது தெரியுறாங்களான்னு பார்ப்பாராம். அந்த ஆர்வம் தான் 19 வயதில் மோனிசா என் மோனாலிஸா படத்தில் நடிக்க டி. ராஜேந்தர் அணுகியதும் ஓகே சொல்லி உள்ளார் மும்தாஜ்.
ஹாட் ஐட்டம் பாடல்கள்: மலபார் போலீஸ், உனக்காக எல்லாம் உனக்காக, குஷி, பட்ஜெட் பத்மநாபன், லூட்டி, ஸ்டார், வேதம், சாக்கலேட், ரோஜாக் கூட்டம், மகா நடிகன், குத்து, செல்லமே, வீராசாமி, கடைசியாக தமிழில் 2009ம் ஆண்டு வெளியான ராகவா லாரன்ஸின் ராஜாதி ராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் மும்தாஜ்.
மும்தாஜ் என்றாலே ஐட்டம் பாடல்கள் தான் ரசிகர்களின் நினைவுக்கு சட்டென வந்து விடும். அந்த அளவுக்கு அவர் நடித்த பல படங்களில் ஹாட்டான ஐட்டம் பாடல்களுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார். அதிலும், விஜய்யுடன் குஷி படத்தில் இடம்பெற்ற அந்த "கட்டிப்புடி கட்டிப்புடிடா" பிரசாந்த் உடன் ஸ்டார் படத்தில் "மச்சினியே மச்ச மச்சினியே" சாக்லேட் படத்தில் "கொக்கர கிரி கிரி", "மல மல மருதமலை" உள்ளிட்ட பாடல்கள் எல்லாமே வேறலெவல் ஹிட்.
கடைசியாக பிக் பாஸ்: தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மும்தாஜ் கடைசியாக பிக் பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
சுத்தம் தான் சோறு போடும் என டாய்லெட் சுத்தம் பண்ணி ரசிகர்களை மீண்டும் கவர்ந்த மும்தாஜ் 90 நாட்கள் அந்த வீட்டில் இருந்து விட்டு 91வது நாள் வெளியேறினார்.

சொத்து மதிப்பு: 2018ம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தென்பட்ட மும்தாஜ் அதன் பின்னர் சினிமா, சின்னத்திரை என எதிலும் தலை காட்டாமல் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். இஸ்லாமிய மதத்தை தீவிரமாக பின் பற்றி வரும் மும்தாஜ் சமீபத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
விஷால் நடித்த செல்லமே படத்தில் விவேக் உடனான காமெடி காட்சிகளில் மும்தாஜின் அசையும் மற்றும் அசையாத சொத்துக்கள் என்ன இருக்கு என விவேக் காமெடி பண்ணியிருப்பார். பல ஆண்டுகள் சினிமாவில் கடுமையாக உழைத்த நடிகை மும்தாஜிடம் மொத்தமாக 20 முதல் 25 கோடி சொத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சினிமாவை விட்டு மும்தாஜ் விலகி சென்றாலும் இன்னமும் ரசிகர்கள் அவரை மறக்காமல் அவர் நடித்த படங்களின் காட்சிகளை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











