பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள்.. சூப்பர்ஸ்டார் முதல் தனுஷ் வரை.. ஏகப்பட்ட பிரபலங்கள் வாழ்த்து!

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதல் நடிகர் தனுஷ் வரை ஏகப்பட்ட திரை பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் தொழில் துறையினர் என ஏகப்பட்டோர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சூப்பர்ஸ்டார் வாழ்த்து

சூப்பர்ஸ்டார் வாழ்த்து

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பாலிவுட் பிரபலங்கள் முதல் கோலிவுட் பிரபலங்கள் என ஏகப்பட்ட பேர் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். பிரதமர் மோடியின் நண்பரான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இந்த கடினமான சூழலில் வலிமையுடன் மோடி இருக்க வேண்டும் என வாழ்த்தி உள்ளார்.

உலக நாயகன் வாழ்த்து

உலக நாயகன் வாழ்த்து

பெரியாரின் 142வது பிறந்தநாளை முன்னிட்டு பதிவு போட்ட உலக நாயகன் கமல்ஹாசன், பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று, சீனா பிரச்சனை உள்ளிட்ட இந்த கடினமான சூழ்நிலையில், நாட்டை பாதுகாக்க உங்களுக்கு வலிமை சேரட்டும் என கமலும் தெரிவித்துள்ளார்.

ஹன்சிகா வாழ்த்து

ஹன்சிகா வாழ்த்து

மதிப்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஹேப்பி பர்த் டே, கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தர வேண்டி பிரார்த்தனை செய்கிறேன் என நடிகை ஹன்சிகா மோத்வானி தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் தமன்

இசையமைப்பாளர் தமன்

கோலிவுட் மற்றும் டோலிவுட் என கலக்கி வரும் இசையமைப்பாளர் தமன், பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஷேர் செய்து, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரதமர் நரேந்திர மோடி, சிறந்த ஆரோக்கியத்தை கடவுள் உங்களுக்கு வழங்க வேண்டும் என ட்வீட் போட்டுள்ளார்.

தனுஷ் வாழ்த்து

தனுஷ் வாழ்த்து

மாமனார் ரஜினிகாந்தை தொடர்ந்து மருமகன் தனுஷும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் என்றும், ஓம் நமச்சிவாயா என்றும் ட்வீட் போட்டு தனது வாழ்த்துக்களை தனுஷ் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X