இன்று பிறந்தநாள் காணும் பிரியா பவானி ஷங்கர்.. ரசிகர்கள் வாழ்த்து மழை!

சென்னை: நடிகை பிரியா பவானி ஷங்கர் இன்று தனது 31வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

செய்தி வாசிப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் நடிகையாக உள்ளார்.

பிறந்தநாளை ரசிகர்கள் ட்விட்டரில் Common DP வெளியிட்டு வாழ்த்து கூறி கொண்டாடி வருகின்றனர்.

வெள்ளித்திரையில் அறிமுகம்

வெள்ளித்திரையில் அறிமுகம்

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் பகல் நிலவு, கல்யாணம் முதல் காதல் வரை தொடர்களில் நடித்து பிரபலமடைந்த பிரியா பவானி ஷங்கர் மேயாத மான் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தார்.

அதிகரித்த ரசிகர்கள்

அதிகரித்த ரசிகர்கள்

மேயாத மான் படத்தின் வெற்றியை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா என பிரியா நடித்த படங்கள் வெற்றி படமாக அமைந்தது. அதுமட்டுமின்றி அவ்வப்போது போட்டோஷூட்கள் நடத்தி அதனை சமூக வலைதளங்களில் பதிவிட ப்ரியாவிற்கு ரசிகர்கள் அதிகரிக்க தொடங்கினர்.

முன்னனி நடிகையாக வாய்ப்பு

முன்னனி நடிகையாக வாய்ப்பு

பிரியா பவானி ஷங்கர் கைவசம் 9 படங்களை வைத்துள்ளார். இப்போது சிம்பு, கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளிவரவுள்ள பத்து தல படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கைவசம் உள்ள அனைத்து படங்களும் நல்ல வரவேற்பு பெற்றால் முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வர நிறைய வாய்ப்புள்ளது.

Common DP வெளியீடு

Common DP வெளியீடு

பிரியா பவானி ஷங்கரின் ரசிகர்கள் Common DP வெளியிட்டு தொடர்ந்து வாழ்த்துக்களை கூறிய வண்ணம் உள்ளனர். அதை தொடர்ந்து தமிழ் திரையுலக பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வளைத்தளங்களில் பதிவிட்டு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X