வெற்றி நாயகி பிரியங்கா சோப்ராவுக்கு இன்று பிறந்தநாள்.. இணையத்தை கலக்கும் வாழ்த்து செய்தி!

மும்பை : பாலிவுட் திரைப்படத்துறையில் நம்பர் ஒன் கதாநாயகியாக வலம் வரும் பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட்டிலும் கலக்கி வருகிறார்.

Recommended Video

Celebrity Cooking • Keerthy Suresh, Sameera Reddy, Priyanka Deshpande

பிரபல ஹாலிவுட் நடிகரான ராக் உடன் இணைந்து பேவாட்ச் என்ற படத்தின் மூலம் ஹாலிவுட் ரசிகர்களுக்கும் மிகவும் பரிச்சயமானவர்.

இந்தியாவில் பல சிறந்த திரைப்படங்களில் நடித்து தற்போது ஹாலிவுட்டில் கொடிகட்டி பறந்து வரும் பிரியங்கா சோப்ரா இன்று தனது பிறந்தநாளை கணவர் நிக் ஜோனாஸ் உடன் மிக விமர்சையாக கொண்டாடி வருகிறார்.

இந்தியாவிற்கு பெருமை

இந்தியாவிற்கு பெருமை

தனது அசரவைக்கும் அழகாலும் தாராளமான குணத்தாலும் அனைவரையும் கவர்ந்து வரும் பிரியங்கா சோப்ரா பல ஆண்டுகளாக பாலிவுட் துறையை தன் கையில் வைத்து நடிப்பில் பல விஸ்வரூபம் எடுத்து இன்றும் மாஸ் காட்டி வருகிறார். மாடல் அழகியாக தனது வாழ்க்கையை தொடங்கிய பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட் வரை தனது நடிப்பு பயணத்தை கொண்டு இன்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

ஹிந்தி படங்களில் கவனம்

ஹிந்தி படங்களில் கவனம்

தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் நடிக்க அறிமுகமான பிரியங்கா சோப்ரா அதன்பின் தமிழ் படங்கள் எதிலும் நடிக்காமல் தொடர்ந்து ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

இரண்டு கதாநாயகிகளில்

இரண்டு கதாநாயகிகளில்

தமிழில் அறிமுகமாகி இந்தி திரைப்பட ரசிகர்களுக்கு "தி ஹீரோ" படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார். அறிமுகமான அதே ஆண்டு அக்சய் குமாருடன் இணைந்து "அண்டாஸ்" என்ற மிகப்பெரிய வெற்றி திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்தார்.

பிரபலமான நபர்களில் ஒருவராக

பிரபலமான நபர்களில் ஒருவராக

இவ்வாறு அறிமுகமான ஓரிரு படங்களிலேயே தனது வெற்றிப் பயணத்தை தொடங்கிய பிரியங்கா சோப்ரா இன்றுவரை பாலிவுட்டில் கொடிகட்டி பறந்து வருகிறார். தேசிய விருதுகள், பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வாங்கிக் குவித்த பிரியங்கா உலக அளவில் இந்தியாவில் பிரபலமான நபர்களில் ஒருவராக முன்னணியில் இருந்து வருகிறார்.

கட்டுக்கடங்காத கவர்ச்சியால்

கட்டுக்கடங்காத கவர்ச்சியால்

உலக அளவில் மிகவும் பரிச்சயமான பிரியங்கா ஹாலிவுட்டிலும் தனது காலடி தடத்தை பதித்து வருகிறார். ஹாலிவுட்டில் பிரபலமான நடிகரான ராக் உடன் இணைந்து "பேவாட்ச்" திரைப்படத்தில் நடித்து தனது கட்டுக்கடங்காத கவர்ச்சியால் ஹாலிவுட்டையும் கட்டிப்போட்ட பிரியங்கா அதை தொடர்ந்து "இஸின்ட் ட் ரொமான்டிக்" போன்ற பல ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.

தி மேட்ரிக்ஸ் 4

தி மேட்ரிக்ஸ் 4

இந்தியாவில் கொடிகட்டி பறந்த பிரியங்கா சோப்ரா இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து உலக அளவில் அனைவரின் பார்வையையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். மேலும் தற்பொழுது உலக அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஹாலிவுட் திரைப்படமான "தி மேட்ரிக்ஸ் 4" திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பிறந்தநாள்

பிறந்தநாள்

பல சாதனைகளை செய்து வெற்றி நாயகியாகவும் சிறந்த பெண்மணியாகவும் விளங்கும் பிரியங்கா சோப்ரா ஜூலை 18 ஆம் தேதியான இன்று தனது 38வது பிறந்தநாளை ஆரவாரமாக கொண்டாடி வருவதையொட்டி இவரது நண்பர்கள், திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி இணையதளத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X