நீங்க ரொம்ப க்யூட்டா இருக்கீங்க.. ராஷி கண்ணா பிறந்த நாளுக்கு வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்!
சென்னை: தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வரும் நடிகை ராஷி கண்ணாவின் 29வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் படத்தை தொடர்ந்து தெலுங்கில் பிசியாகியுள்ளார் ராஷி கண்ணா.
பிரதி ரோஜு பண்டாகே படக்குழுவினருடன் ராஷி கண்ணா தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.
ராஷி கண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஹேப்பி பர்த்டே ராஷி கண்ணா ஹேஷ்டேகை உருவாக்கி தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
க்யூட்டா அழகா இருக்கீங்க
ஹன்சிகாவிற்கு பிறகு பப்ளி நடிகையாக தென்னிந்திய சினிமாவை கலக்கி வருகிறார் நடிகை ராஷி கண்ணா, 1990ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி பிறந்த ராஷி கண்ணாவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ட்விட்டரில் ராஷி கண்ணாவின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். க்யூட்டாகவும் அழகாகவும் இருக்கும் ராஷி கண்ணாவுக்கு ஹேப்பி பர்த்டே என இந்த ரசிகர் வாழ்த்துக் கூறியுள்ளார்.
கேக் கட்டிங்
டோலிவுட் இயக்குநர் மாருதி இயக்கத்தில் சாய் தரம் தேஜா, சத்யராஜ் நடிப்பில் உருவாகி வரும் பிரதி ரோஜு பண்டாகே படத்தில் நாயகியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். ராஷி கண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதி ரோஜு பண்டாகே படக்குழுவினருடன் ராஷி கண்ணா கேக் கட்டிங் செய்துள்ளார். டிசம்பர் 20ம் தேதி அந்த படம் திரைக்கு வருகிறது.
லவ் யூ பேபி
ராஷி கண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறியுள்ள இந்த ரசிகர் லவ் யூ பேபி என தனி ரூட்டும் போட்டுள்ளார்.
கவிதை கவிதை
ராஷி கண்ணாவிற்கு 1 மில்லியன் ரசிகர்கள் இருந்தால் அதில் நான் ஒன்றாக இருப்பேன், 10 ரசிகர்கள் இருந்தாலும் அதிலும் நான் ஒன்றாக இருப்பேன். ஒரு ரசிகர் கூட இல்லையென்றால், நான் இந்த கிரகத்தில் இல்லையென்று அர்த்தம் என்றும், உலகம் ராஷி கண்ணாவை எதிர்த்தால், நான் உலகத்தை எதிர்ப்பேன் என்றும் அன்பு பொங்க இந்த ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











