"பாகுபலி" நாயகன் பிரபாஸ்-க்கு இன்று பர்த்டே..இணையத்தில் தெறிக்கும் வாழ்த்து செய்தி !
ஹைதராபாத் : பாகுபலி திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இந்திய அளவில் சிறந்த 10 நடிகர்களில் ஒருவராக பிரபாஸ் உயர்ந்துள்ளார்.
மிரள வைக்கும் நடிப்பின் மூலம் படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வரும் பிரபாஸ் இப்பொழுது ராதே ஷ்யாம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், ஹிந்தி, என பல மொழிகளில் இவருக்கான ரசிகர் கூட்டம் பல மடங்கு உயர்ந்து இருக்கும் நிலையில் அக்டோபர் 23ஆம் தேதியான இன்று இவர் தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி திரைப் பிரபலங்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களைக் கூறி வரும் நிலையில் இவரது ரசிகர்கள் இணையதளத்தை வாழ்த்துக்களால் திணற வைத்துள்ளனர்.

வசூல் சாதனைகளை
இந்திய சினிமா வரலாற்றையே புரட்டிப் போட்ட மிக சில திரைப்படங்களில் பாகுபலி மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. இந்திய சினிமா இதுவரை கண்டிராத பிரமாண்ட காட்சி அமைப்புகளுடன் உருவாகி அனைவரையும் கவர்ந்த இந்த திரைப்படம் இந்திய அளவில் பல வசூல் சாதனைகளை புரிந்து மாபெரும் வெற்றி பெற்றதோடு உலக அளவிலும் பல்வேறு நாடுகளில் மக்களால் கொண்டாடப்பட்டது.

பாகுபலி திரைப்படத்தில்
ஹாலிவுட் திரைப்படங்களில் மட்டுமே கண்டுவந்த பிரமாண்டத்தை அப்படியே கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திய பாகுபலி திரைப்படத்தில் இரண்டு வித்தியாசமான கதாபாத்திரங்களில் கதாநாயகனாக நடித்து அசத்தி இருந்த பிரபாஸ் தனது மிரட்டலான நடிப்பின் மூலம் இப்பொழுது உலக அளவில் பல கோடி ரசிகர்களை கொண்டு இந்தியாவில் பலராலும் உற்று நோக்கப்படும் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அதிரடியான ஆக்சன்
உலக அளவில் இந்திய திரைப்படங்கள் செய்த அனைத்து சாதனைகளையும் உடைத்தெறிந்த பாகுபலி திரைப்படத்தின் வசூலைத் தொடர்ந்து, அதிரடியான ஆக்சன் சண்டை காட்சிகளுடன் சாஹோ திரைப்படத்தில் மீண்டும் பட்டையை கிளப்பி இருந்தார்.

முன்னேறி இருக்கும்
இந்த நிலையில் அதிக சம்பளம் வாங்கும் சிறந்த நடிகர்களின் பட்டியலில் முன்னேறி இருக்கும் பிரபாஸ் இப்பொழுது மற்றுமொரு பிரமாண்ட திரைப்படத்திற்கு நடித்து வருகிறார்.

வெளியாக உள்ளதாக
பூஜா ஹெக்டே, பிரபாஸ் இணைந்து நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு ராதே ஷ்யாம் என பெயரிட பட்டிருக்கும் நிலையில் இவை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

டஃப் கொடுத்து
பிரபாஸின் திரைப்படங்கள் தெலுங்கில் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் வெளியாகி பட்டையக் கிளப்பி வரும் நிலையில் இவருக்கான ரசிகர் நாளுக்கு நாள் உயர்ந்து வர இப்பொழுது அனைத்து மொழி நடிகர்களுக்கும் டஃப் கொடுத்து வருகிறார்.

திணறடித்து வருகின்றனர்
தனது திரைப்படங்களின் மூலம் பாக்ஸ் ஆபீசை தொடர்ந்து மிரட்டி வரும் "பாகுபலி" பிரபாஸ் அக்டோபர் 23 ஆம் தேதியான இன்று தனது 41வது பிறந்தநாளைக் கொண்டாடி வருவதை யொட்டி இந்தியாவில் உள்ள பல்வேறு திரைத்துறை பிரபலங்களும் இவருக்கு வாழ்த்து கூறி வரும் நிலையில், இவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து திணறடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











