இவங்க ஹைடெக் கொள்ளைக்காரி… இளைஞர்கள் இதயங்கள் பத்திரம்.. ஹேப்பி பர்த்டே ரிது வர்மா!

சென்னை: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் நாயகி ரிது வர்மாவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

கோலிவுட் ரசிகர்களை ஒரே படத்தில், ஒட்டுமொத்தமாக கொள்ளையடித்து இருக்கும் ஹைடெக் கொள்ளைக்காரி ரிது வர்மாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து மழை குவிகிறது.

தெலங்கானாவை சேர்ந்த ரிது வர்மா, தமிழ், மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார்.

ஹேப்பி பர்த்டே ரிது

ஹேப்பி பர்த்டே ரிது

1990ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி ஹைதராபாத்தில் பிறந்த நடிகை ரிது வர்மாவின் 30வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. தெலுங்கு திரையுலகில் சிறந்த நடிகையாக வலம் வந்த ரிது வர்மா நடிப்பில் சமீபத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில், ரிது வர்மாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பக்கா ஃபிராடு

பக்கா ஃபிராடு

தேசிங் பெரியசாமி இயக்கத்தில், துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி உள்ள கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், திரைப்படத்தில், ஒரு ரூபாய்க்கு கூட போராடும் நேர்மையான பெண்ணாக ஆரம்பத்தில் காட்டப்படும் ரிது வர்மா, இடைவேளையின் போது, துல்கரை ஏமாற்றி பல லட்சங்களை ஆட்டையப் போட்டு எஸ்கேப் ஆகும் இடத்தில் பக்கா ஃபிராடாக நடித்திருப்பார்.

கண்ணழகு

கண்ணழகு

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் ஒவ்வொரு பிரேமிலும் செம க்யூட்டாக அழகோவியமாக காட்சி தரும் ரிது வர்மாவின், கண்ணழகு, இளைஞர்கள் நெஞ்சை உடனடியாக கொள்ளையடிக்கும் ஆயுதமாக இருக்கிறது. ரொமான்டிக் ஹீரோயினாக மட்டும் நடிக்காமல், தனது நடிப்பாலும், ஒவ்வொரு படத்திலும் ஸ்கோர் செய்து வருகிறார் ரிது.

Recommended Video

RITU VARMA , NIRANJINI AHATHIAN SPEECH | KANNUM KANNU KOLLAIYADITHAL PRESS MEET | FILMIBEAT TAMIL

இயக்குநர் வாழ்த்து

துல்கர் சல்மான், ரக்‌ஷன், ரிது வர்மா, கெளதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் உருவான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி உள்ள தேசிங் பெரியசாமி, நாயகி ரிது வர்மாவின் பிறந்த நாளுக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஹேப்பி பர்த்டே டு மீரா/ இஷிதா/ மது/??? ஏனென்றால் படத்தின் இறுதி வரை நாயகியின் ரியல் பெயரை சொல்ல மாட்டார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X