»   »  'செல்லாக்குட்டி', 'செல்பி புள்ள' சமந்தாவை போட்டிபோட்டு வாழ்த்தும் ரசிகர்கள்

'செல்லாக்குட்டி', 'செல்பி புள்ள' சமந்தாவை போட்டிபோட்டு வாழ்த்தும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ், தெலுங்கு என இருமொழி ரசிகர்களையும் கவர்ந்த நடிகை சமந்தா இன்று தன்னுடைய 29 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

இதனையொட்டி 2 மாநில ரசிகர்களும் #happybirthdaysamantha என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி சமந்தாவிற்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

தெலுங்கில் பவன் கல்யாண், பிரபாஸ், மகேஷ்பாபு, ஜூனியர் என்டிஆர் தமிழில் விஜய், சூர்யா, தனுஷ் போன்ற நடிகர்களின் ரசிகர்கள் போட்டிபோட்டு வாழ்த்துவதால் தேசியளவில் சமந்தாவின் பிறந்தநாள் ட்ரெண்டடித்துக் கொண்டிருக்கிறது.

சமூக வலைதளங்களில் காமன் டிபி, சமந்தாவின் புகைப்படங்கள் என தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து வரும் ரசிகர்களின் ஒருசில பதிவுகளை இங்கே பார்க்கலாம்.

பிரபாஸ்

ஈகா ஆடியோ விழாவில் பிரபாஸ் -சமந்தா இருவரும் அருகருகே அமர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு சமந்தாவை வாழ்த்தியிருக்கிறார் அரவிந்த். பிரபாஸ்-சமந்தா இணைந்து இதுவரை எந்தப் படத்திலும் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சாமிசிலை போல

'கத்தி' படத்தின் 'ஆத்தி என நீ' பாடல் வரிகளைப் பகிர்ந்து சமந்தாவை வாழ்த்தியிருக்கிறார் பிரதீப். சமந்தா-விஜய் முதன்முறையாக ஜோடி சேர்ந்த இப்படம் 100 கோடிகளை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

தெறி பேபி

தொடர்ந்து சமந்தாவின் படங்கள் வெற்றிபெறவேண்டும் என வாழ்த்தியிருக்கிறார் ஸ்ரீதர். ரொம்ப நல்ல மனசு சார் உங்களுக்கு

அஞ்சான்

'24 மணி நேரமும் தூக்கத்தைக் கெடுக்கும் சமந்தாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்' என்று கூறியிருக்கிறார் சூர்யா.

சிம்ரன், திரிஷா

'சிம்ரன், திரிஷாவுக்குப் பின் விஜய்க்கு பொருத்தமான ஜோடி சமந்தா' என்ற உண்மையைக் கண்டுபிடித்து சமந்தாவை வாழ்த்தியிருக்கிறார் ராஜேஷ்.

செல்லாக்குட்டி

'இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 'செல்லாக்குட்டி' என்று சமந்தாவை வாழ்த்தியிருக்கிறார் அசார்.

இதுபோல மேலும் பல ரசிகர்களின் வாழ்த்து மழையால் #happybirthdaysamantha ஹெஷ்டேக் இன்னும் ட்ரெண்டிங்கில் உள்ளது.

ரசிகர்களுடன் இணைந்து தட்ஸ்தமிழ் சார்பில் நாமும் வாழ்த்தலாம் 'இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சமந்தா'..

    English summary
    Today Actress Samantha Celebrating Her 29th Birthday. From thatsTamil and all our Readers around the world, wishing this marvelous actress a wonderful birthday ahead.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil