சிவகார்த்திகேயனின் டான் படத்தில் சமுத்திரகனிக்கு என்ன ரோல் தெரியுமா? சரியான பிறந்தநாள் பரிசு!

சென்னை: சசிகுமார் முதல் ராஜமெளலி வரை பல சிறந்த இயக்குநர்கள் இயக்கத்தில் நடித்துள்ள நடிகரும் இயக்குநருமான சமுத்திரகனி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இயக்குநராகவும் நடிகராகவும் தனது முத்திரை பதித்துள்ள சமுத்திரகனியின் பிறந்தநாளை முன்னிட்டு பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் டான் படத்தில் சமுத்திரகனி என்ன கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

சமுத்திரகனி பிறந்தநாள்

சமுத்திரகனி பிறந்தநாள்

வெல்வோம் என எப்போதும் முழங்கிக் கொண்டே இருக்கும் சமுத்திரகனி தனது வாழ்க்கையில் தொடர்ந்து வெற்றிகளை பெற்று முன்னேறி வருகிறார். நடிகராகவும், இயக்குநராகவும் சமுத்திரகனி நல்ல படங்களில் நடித்தும் இயக்கியும் வருகிறார். ஹீரோவாகவும், வில்லனாகவும், நண்பனாகவும், அப்பாவாகவும் நடித்து அசத்தி வரும் சமுத்திரகனிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

தரமான இயக்குநர்

தரமான இயக்குநர்

2003ம் ஆண்டு உன்னைச் சரணடைந்தேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சமுத்திரகனி. 2009ம் ஆண்டு அவர் இயக்கத்தில் வெளியான நாடோடிகள் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. போராளி, நிமிர்ந்து நில், அப்பா, தொண்டன், நாடோடிகள் 2 மற்றும் வினோதய சித்தம் உள்ளிட்ட படங்களை இயக்கி தான் ஒரு தரமான இயக்குநர் என்பதை நிரூபித்தவர்.

சுப்பிரமணியபுரம்

சுப்பிரமணியபுரம்

பார்த்தாலே பரவசம், நெறஞ்ச மனசு, பொய், பருத்திவீரன் உள்ளிட்ட படங்களில் அன்கிரெடிடட் கதாபாத்திரத்தில் நடித்து வந்த சமுத்திரகனி, இயக்குநர் சசிகுமார் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த சுப்பிரமணியபுரம் படம் தான் அவரை முழுமையான நடிகராக மாற்றியது. தொடர்ந்து, ஈசன், சாட்டை, நீர்ப்பறவை, வேலையில்லா பட்டதாரி என பல படங்களில் நடித்துள்ளார்.

ராஜமெளலி படத்தில்

ராஜமெளலி படத்தில்

அல்லு அர்ஜுனின் அலா வைகுந்தபுரமுலோ படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்த சமுத்திரகனி, ராஜமெளலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான RRR படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிகர் ராம்சரணின் கார்டியனாக நடித்து அனைவரது பாராட்டுக்களையும் அள்ளி உள்ளார்.

சிவகார்த்திகேயனுக்கு வில்லன்

சிவகார்த்திகேயனுக்கு வில்லன்

சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் படத்தில் வில்லனாக நடித்து பட்டையை கிளப்பி இருந்தார் நடிகர் சமுத்திரகனி. ஏழரை மூக்கன் எனும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி இருந்தார். டான் படத்திலும் மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தில் அவர் கதாபாத்திரம் குறித்த தகவல் கசிந்துள்ளது.

டான் படத்தில் என்ன ரோல்

டான் படத்தில் என்ன ரோல்

சமுத்திரகனியின் பிறந்தநாள் அதுவுமாக டான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக சமுத்திரகனி நடிக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. வரும் மே 13ம் தேதி வெளியாக உள்ள டான் படத்தில் செம சூப்பரான ரோலில் சமுத்திரகனி மிரட்ட உள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா கல்லூரி டீனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனுசுக்கு வேலையில்லா பட்டதாரி 1 மற்றும் 2ல் அப்பாவாக நடித்த சமுத்திரகனி தற்போது சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக மாறி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X