பிறந்த நாள் அதுவுமா தம்பிகளுக்கு டபுள் ட்ரீட்.. சீமான் இன்னும் சினிமாக்காரர்தான்!

Recommended Video

தமிழ் பொண்ணுங்களுக்கு ஏன் வாய்ப்பு குடுக்க மாட்டிங்குறீங்க-நடிகை ஸ்ரீபிரியங்கா- வீடியோ

சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது 53வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

இயக்குநர், நடிகர் என சினிமாவில் கலக்கி வந்த சீமான், நாம் தமிழர் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

இதனால், சினிமாவில் அதிகமாக கவனம் செலுத்தாமல் இருந்து வந்த சீமான், நடிப்பில் இன்று ஒரே நாளில் மட்டும் இரண்டு படங்கள் ரிலீசாகியுள்ளன.

சமூக அக்கறை

சமூக அக்கறை

சீமான் நடித்த படங்களில் அவர் இயக்கிய படங்களில் சமூக அக்கறை மேலோங்கி இருப்பது வழக்கம். அதன் வெளிப்பாடு தான் திரைத்துறையில் இருந்து சீக்கிரமாகவே அரசியலுக்கு சீமான் நுழையவும் காரணமாக அமைந்தது. மாதவனை வைத்து சீமான் இயக்கிய தம்பி படம் சமூக அக்கறைகள் நிறைந்த வெற்றி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

மிக மிக அவசரம்

மிக மிக அவசரம்

தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் சீமான், தற்போது அதிகமாக சினிமா படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார். ஆனாலும், சில முக்கியமான கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க அழைப்பு வந்தால், அதனை மறுக்காமல் நடித்து கொடுக்கிறார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிமுகமாகியுள்ள ‘மிக மிக அவசரம்' படம் இன்று வெளியாகியுள்ளது. துருவ் விக்ரமின் ஆதித்ய வர்மா இன்று வெளியாகாத நிலையில், ‘மிக மிக அவசரம்' படத்தின் பக்கம் மக்களின் கவனம் திரும்பியுள்ளது. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக சீமான் நடித்துள்ளார்.

டபுள் ட்ரீட்

டபுள் ட்ரீட்

சீமானின் 53வது பிறந்த நாளை முன்னிட்டு தனது தம்பிகளுக்கு இன்று சீமான் டபுள் ட்ரீட் கொடுத்துள்ளார். சீமான் நடிப்பில் ‘மிக மிக அவசரம்' மற்றும் ‘தவம்' என இரு படங்கள் இன்று வெளியாகியுள்ளன. ஏற்கனவே அருண் விஜய் நடிப்பில் 'தவம்' என்ற டைட்டிலில் ஒரு படம் வெளியாகியுள்ள நிலையில், ஆர்.விஜயானந்த் - ஏ.ஆர்.சூரியன் இணைந்து இயக்கியுள்ள ‘தவம்'படத்தில், நடேசன் வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் சீமான் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துகள்

வாழ்த்துகள்

சினிமா மற்றும் அரசியல் என இரு குதிரைகளிலும் நடிகர் கமல்ஹாசனை போல பயணம் செய்யும் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். மேலும், சீமான் எடுக்கும் நல்ல முயற்சிகள் வெற்றி பெறவும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X