அஜித்தின் ரியல் வலிமை.. இந்தியளவில் டிரெண்டாகும் ஷாலினி பிறந்தநாள்!

சென்னை: நடிகர் அஜித்குமாரின் மனைவியும் முன்னாள் நடிகையுமான ஷாலினியின் 40வது பிறந்த தினம் இன்று.

நேற்று பிறந்தநாள் கொண்டாடிய அருண் விஜய்யின் பிறந்தநாள் ஹேஷ்டேகையே டிரெண்ட் செய்த அஜித் ரசிகர்கள், இன்று மட்டும் சும்மாவா விடுவார்களா என்ன?

காலை முதலே இந்தியளவில் HBDShaliniAjith என்ற ஹேஷ்டேகை டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

அஜித்தின் வலிமை

எச். வினோத் இயக்கத்தில் அஜித் அடுத்ததாக நடிக்கவுள்ள படத்திற்கு வலிமை என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அஜித்தின் ரியல் வலிமை எப்போதும் ஷாலினி தான். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாங்கன்னு சொல்லுவாங்க, அப்படி அஜித்தின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் பெண்ணாக ஷாலினி இருக்கிறார்.

அண்ணி

அஜித் ரசிகர்கள், அஜித்தை அண்ணன் என்று அழைக்காமல் ‘தல' என்று செல்லமாக அழைத்து வருகின்றனர். ஆனாலும், அஜித்தின் மனைவி ஷாலினியை அவர்கள் என்றும் அன்புடன் அண்ணி என்றே அழைத்து வருகின்றனர். ஷாலினியின் பிறந்தநாளை முன்னிட்டு, ஒவ்வொரு ஊரிலும் உள்ள அஜித் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர்.

பாசமான அம்மா

சிறு வயதில் இருந்தே நடிகையாக கலக்கி வந்த ஷாலினி, விஜய், அஜித், பிரசாந்த், மாதவனுடன் நடித்த ஒவ்வொரு படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தன. ஆனால், திருமணத்திற்கு பிறகு, குழந்தைகளை வளர்ப்பதிலும், குடும்பத்தை பேணி காப்பதிலும், கவனத்தை செலுத்த தொடங்கிய ஷாலினி, அனோஷ்கா மற்றும் ஆத்விக்குக்கு பாசமான அம்மாவாக இருந்து வருகிறார்.

காஸ்ட்யூம் டிசைனர்

நடிப்பை விட்டு விலகினாலும், சினிமாவை விட்டு ஷாலினி முழுமையாக விலகவில்லை. நடிகர் அஜித் நடிக்கும் படங்களுக்கு அவர் தான் காஸ்ட்யூம் டிசைனராக பணிபுரிந்து வருகிறார். நடிகர் அஜித் கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் எப்படி தோன்ற வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளையும் ஷாலினி வழங்கி வருகிறார்.

ரஜினியுடன் ஷாலினி

ஹேப்பி பர்த்டே ஷாலினி ஹேஷ்டேகை இந்தியளவில் அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். விடுதலை படத்தில், நடிகர் ரஜினிகாந்துடன், நடிகை ஷாலினி குழந்தை பருவத்தில் நடித்த மாஸ் காட்சியையும் வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X