twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹேப்பி பர்த்டே சித் ஸ்ரீராம்.. கடலில் கண்டெடுத்த முத்து.. சின்ன சீர்காழியும் சில சீக்ரெட்களும்!

    |

    சென்னை: "அடியே.. அடியே.. என்னை எங்கே நீ கூட்டிப் போற.." என மணிரத்னம் இயக்கத்தில் இசைப்புயல் இசையில் உருவான கடல் பட பாடல் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான சித் ஸ்ரீராமின் 30வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

    Recommended Video

    Sid Sriram Mesmerizing Voice | A.R.Rahman, Bombay, Malarodu Malaringu, Maniratnam

    இப்போ வர படங்களில் எல்லாம் ஒரு பாட்டு நல்லா ஹிட் ஆகுதுன்னா.. அது சித் ஸ்ரீராம் குரலில் இருப்பது வேற லெவல் மேஜிக்.

    ஒரு பாட்டையாவது ஹிட் ஆக்க வேண்டும் என இசையமைப்பாளர்கள் இவரது கால்ஷீட்டுக்காக காத்திருப்பது தான் சித் ஸ்ரீராமின் வளர்ச்சியின் சீக்ரெட்.

    கிளியோபாட்ராவே இவ்ளோ அழகா இருந்தாங்களான்னே தெரியலையே.. வைரலாகும் பியூமி ஹன்சமாலியின் போட்டோ!கிளியோபாட்ராவே இவ்ளோ அழகா இருந்தாங்களான்னே தெரியலையே.. வைரலாகும் பியூமி ஹன்சமாலியின் போட்டோ!

    நவீன சீர்காழி

    நவீன சீர்காழி

    ஃபாஸ்ட் பீட் நம்பர்கள் அதிகரித்து விட்டது, ரம்மியமான மனதை மயக்கும் மெலோடி பாடல்களே குறைந்து விட்டது என புலம்பிய நிலையில், "என்னோடு நீ இருந்தால்.. உயிரோடு நான் இருப்பேன்", "மறுவார்த்தை பேசாதே", "இந்த உற்சாகம் போதும் சாகத் தூண்டும் இதே விநாடி" என ஒவ்வொரு பாடலிலும் தனது மாயக் குரலால் மெய் சிலிர்க்க வைத்து வரும் இந்த நவீன சீர்காழி கோவிந்தராஜனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

    3 வயதில்

    3 வயதில்

    1990ம் ஆண்டு மே 19ம் தேதி சென்னையில் பிறந்த சித் ஸ்ரீராம் இன்று தனது 30வது பிறந்தநாளை சிம்பிளாக வீட்டிலேயே கொண்டாடி வருகிறார். ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். பல சாதனைகளுக்கு சொந்தக்காரராகி வரும் சித் ஸ்ரீராம் தனது 3 வயதிலேயே கர்நாடக சங்கீதத்தை கற்க தொடங்கினார்.

    கலிபோர்னியா வாழ்க்கை

    கலிபோர்னியா வாழ்க்கை

    சித் ஸ்ரீராம் சென்னையில் பிறந்து இருந்தாலும், சிறு வயதிலேயே அவரது பெற்றோர்கள் கலிபோர்னியாவுக்கு சென்று குடியேறியதால், கல்வி, இசை என அனைத்தையும் கலிபோர்னியாவிலேயே கற்றுக் கொண்டார் சித் ஸ்ரீராம். பிரபல கர்நாடக இசை பாடகியான லதா ஸ்ரீராம் தான் தனது மகன் சித் ஸ்ரீராமின் முதல் இசை ஆசிரியை என்பது குறிப்பிடத்தக்கது.

    பெர்க்லீ இசைக்கல்லூரி

    பெர்க்லீ இசைக்கல்லூரி

    சிறு வயது முதலே இசையோடு வளர்ந்து வந்த சித் ஸ்ரீராம், பாஸ்டன் நகரில் உள்ள Berklee College of Music எனும் இசைக்கல்லூரியில் தனது இசை ஆற்றலை வளர்த்துக் கொண்டார். பாடுவது, இசைக்கருவிகளை வாசிப்பது என இரண்டிலுமே ஒரே சமயத்தில் வித்தகராக பயிற்சி பெற்று வந்தார் இந்த சின்ன சீர்காழி கோவிந்தராஜன்.

    அறிமுகம் செய்த ஏ.ஆர். ரஹ்மான்

    அறிமுகம் செய்த ஏ.ஆர். ரஹ்மான்

    சினிமாவில் பல சிறந்த குரல்களை அறிமுகம் செய்து வைத்து வரும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், மணிரத்னம் இயக்கத்தில் கெளதம் கார்த்திக், அர்ஜுன், அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான கடல் படத்தில் இடம்பெற்ற "அடியே அடியே" பாடலை பாட சித் ஸ்ரீராமுக்கு வாய்ப்பு கொடுத்து தமிழ் சினிமாவுக்கு இவரை அறிமுகப்படுத்தி வைத்தார்.

    யூடியூப் பிரபலம்

    யூடியூப் பிரபலம்

    கர்நாடிக் மியூசிக் மட்டுமின்றி ராப் உள்ளிட்ட மேற்கிந்திய இசையிலும் தேர்ச்சி பெறத் தொடங்கிய பாடகர் சித் ஸ்ரீராம், கடந்த 2010ம் ஆண்டு தன்னுடைய 20வது வயதில் யூடியூபில் தனது முதல் இசை ஆல்பத்தை வெளியிட்டு வைரலாக்கினார். தொடர்ந்து யூடியூபில் தனது பாடல்களை வெளியிட்டு யூடியூப் பிரபலமாக அப்பவே தனது சித்து விளையாட்டுக்களை காட்டியுள்ளார்.

    மற்ற மொழிகளில்

    மற்ற மொழிகளில்

    மறுவார்த்தை பேசாதே, தாரமே தாரமே, குறும்பா, கண்ணான கண்ணே என தமிழில் கலக்கி வரும் சித் ஸ்ரீராம் டோலிவுட்டில் வெளிபோமாகே, யாடிகே, நா ஜாதகா, அடிகா அடிகா மற்றும் அலா வைகுந்தபுறமுலோ படத்தில் வந்த சமஜவரகமனா என பல பாடல்களை பாடி டோலிவுட்டிலும் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை அதிகரித்து வருகிறார்.

    அடுத்த லெவல்

    அடுத்த லெவல்

    வித்தியாசமான இவரின் குரலுக்கு மயங்காத மனிதர்களே இருக்க மாட்டார்கள். ஏ.ஆர். ரஹ்மானையே ஒரு வாய்ஸ் கவர்ந்தது என்றால், அது சாதாரண குரலாக நிச்சயம் இருக்காது. பாடுவதில் மட்டுமின்றி இசையிலும் ஆர்வத்தை செலுத்தி வந்த சித் ஸ்ரீராம் ‘வானம் கொட்டட்டும்' படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் தன்னை நிரூபித்துள்ளார். இசையில் இன்னும் பல சாதனைகளை செய்ய வாழ்த்துகிறோம்.

    English summary
    Singer, Music Composer Sid Sriram’s 30th birthday celebration happened today. Here we discuss about some interesting facts about Sid Sriram.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X