பர்த் டே பேபி சிவகார்த்திகேயன்...இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா ?
சென்னை : மேடை நிகழ்ச்சிகள் மூலம் தனது வாழ்க்கையை துவங்கிய சிவகார்த்திகேயன், பிறகு விஜய் டிவி.,யில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமானார். 2012 ம் ஆண்டு வெளியான மெரினா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானவர்.
பல ஹிட் படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் இன்று தனது 36 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இன்று அவரை பற்றி பலரும் அறியாத சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
Recommended Video


தந்தை வழியில் மகன் :
சிவகார்த்திகேயன் திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் இன்ஜினியரிங் படித்தவர். தனது தந்தையை போல் போலீஸ் ஆக வேண்டும் என்பது தான் அவரது சிறு வயது கனவு. ஆனால் எதிர்பாராத விதமாக சிவகார்த்திகேயன் பள்ளி படிக்கும் போதே அவரது தந்தை இறந்து விட்டார். இதனால் தனது குடும்பத்திற்காக தனது மனதை மாற்றிக் கொண்டு இன்ஜினியரிங் படித்துள்ளார். கல்லூரியில் படிக்கும் போதே அவர் வெளிப்படுத்திய திறமைகள், சினிமாவில் அவர் பெரிய ஸ்டாராக உதவியது.

ரீல் – ரியல் வாழ்க்கை :
சிரித்த முகத்துடன், எப்போதும் நகைச்சுவையாக அவர் பேசும் பேச்சுக்கள் டிவி ஷோ மற்றும் சினிமாவில் பல ரசிகர்களை பெற்று தந்துள்ளது. ஆனால் நிஜத்தில் அவர் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர். எதாவது பாதிப்பு என்றால் கண்ணிரை கட்டுப்படுத்தாத கேரக்டர். கடந்த காலங்களில் சில நிகழ்வுகளாக கனத்த இதயத்துடன் காணப்பட்டவர் சிவகார்த்திகேயன்.

கராத்தே சாம்பியன் :
சிவகார்த்திகேயன் கராத்தேயில் பிளாக் பெல்ட் பெற்றவர். விளையாட்டில் கிரீன் பெல்ட் பெற்றவர். விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உடையவர்.

கன்னட படத்தில் சிவகார்த்திகேயன் :
தமிழில் உச்ச நடிகராக ஆவதற்கு முன் கன்னட படங்களிலும் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமாரின் வஜ்ரகயா படத்தில் பாடல் ஒன்றில் சிறிய கேரக்டரில் நடித்துள்ளார். ஆனால் அப்போது, தமிழில் அவர் சூப்பர் ஹீரோ ஆவார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

அஜித்துடன் நடித்த சிவகார்த்திகேயன் :
டைரக்டர் பாண்டியராஜ் இயக்கிய மெரினா படம் தான் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த முதல் படம். ஆனால் அதற்கு முன் ராஜூ சுந்தரம், அஜித்தை வைத்து தயாரித்த ஏகன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக கடைசி நிமிடத்தில் ஏகன் படத்தின் சிவகார்த்திகேயன் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டது. ஆனால் ஏகன் பட சூட்டிங்கின் போது பல தருணங்களில் சிவகார்த்திகேயனை பாராட்டிய அஜித், பல ஊக்கமிளக்கும் வார்த்தைகளை கூறி உள்ளார்.


Click it and Unblock the Notifications











