தமிழ் சினிமாவோட பெருமை தளபதி... நடிகர் நாசர் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து
சென்னை : தளபதி விஜய் தனது 47வது பிறந்ததினத்தை இன்றைய தினம் கொண்டாடி வருகிறார்.
Recommended Video
அவரை விட அவரது ரசிகர்கள், சக நடிகர்கள் ஆகியோர் இந்த பிறந்தநாளை திருவிழாவைப் போல கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ள நடிகர் நாசர், தமிழ் சினிமாவின் பெருமை நடிகர் விஜய் என்று தெரிவித்துள்ளார்.

47வது பிறந்ததினம்
தளபதி விஜய் தனது 47வது பிறந்ததினத்தை இன்றைய தினம் கொண்டாடி வருகிறார். அவர் தனது பிறந்தநாளை அந்த அளவிற்கு கொண்டாடுவாரோ இல்லையோ ஆனால் அவரது ரசிகர்கள் மற்றும் சக நடிகர்கள், நடிகைகள் அவரது பிறந்தநாளை திருவிழாவை போல கொண்டாடி வருகின்றனர்.

குவியும் வாழ்த்து மழை
சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை குவிந்து வருகிறது. மூத்த நடிகர்களும் தங்களது வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் பதிவிட்டு வருகின்றனர். நடிகர் நாசர் தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் பெருமை விஜய் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சிறப்பான நடிகர்
மேலும் அதிசயத்தக்க மனிதன் என்றும் சிறப்பான நடிகர் என்றும் பாராட்டியுள்ள நாசர், இந்த ஆண்டும் விஜய்க்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதேபோல நடிகர் கவுண்டமணியும் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார். பீஸ்ட் படம் வெற்றிபெறவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் வடிவேலு வாழ்த்து
இதனிடையே நடிகர் வடிவேலுவும் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்யை வாழ்த்தியுள்ளார். பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி என்று தெரிவித்துள்ள வடிவேலு, விஜய்யின் அடுத்த படம் பீஸ்ட் வெற்றி அடைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக நேற்றைய தினம் பீஸ்ட் போஸ்டர் வெளியான போதும் அவர் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

சிம்ரன் பாராட்டு
இதேபோல நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன் உள்ளிட்டவர்களும் தங்களது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். பீஸ்ட் போஸ்டரில் விஜய்யின் லுக் மிகவும் சிறப்பாக உள்ளதாகவும் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











