For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  “வெள்ளாவிலவச்சு வெளுத்த புள்ளைக்கு ஹேப்பி பர்த்டே”: ஆடுகளம் டூ சபாஷ்மித்து வரை, டாப் கியரில் டாப்ஸி

  |

  மும்பை: தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் டாப்ஸி.

  தமிழில் தனுஷுடன் 'ஆடுகளம்' படத்தின் மூலம் அறிமுகமான டாப்ஸி, அஜித், விஜய் சேதுபதி, ராகவா லாரன்ஸ் ஆகியோருடன் நடித்துள்ளார்.

  இன்று பிறந்தநாள் கொண்டாடிவரும் நடிகை டாப்ஸிக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

  வந்தியத்தேவனுக்கு முன்னாடி விருமன் வரான்.. டிரைலர் மற்றும் ஆடியோ லாஞ்ச் எப்போ, எங்கே தெரியுமா? வந்தியத்தேவனுக்கு முன்னாடி விருமன் வரான்.. டிரைலர் மற்றும் ஆடியோ லாஞ்ச் எப்போ, எங்கே தெரியுமா?

  ஆரம்பமே அமர்க்களம்

  ஆரம்பமே அமர்க்களம்

  பஞ்சாப்பைச் சேர்ந்த டாப்ஸி, முதலில் தெலுங்கில் வெளியான 'சும்மாண்டி நாதம்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அவரது நடிப்பை பலரும் கவனித்தது 'ஆடுகளம்' படத்தில் தான். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷின் ஜோடியாக ஐரின் என்ற ஆங்கிலோ இந்தியன் கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் வரும் "அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா? உன்ன வெயிலுக்கு காட்டாம வளர்த்தாய்ங்களா?" என்ற பாடல் வரிகளுக்கு பொருத்தமாக அழகுப் பதுமையாக காட்சியளித்தார். ஆர்ப்பாட்டமில்லாத அந்த நடிப்பும், டாப்ஸியின் திரைப்பயணத்தில் டாப் கியரை தட்டிவிட்டது.

  தெலுங்கில் தாறுமாறு

  தெலுங்கில் தாறுமாறு

  தமிழில் 'ஆடுகளம்' படத்தைத் தொடர்ந்து 'வந்தான் வென்றான்' படத்தில் நடித்திருந்தார். ஆனாலும், தெலுங்கில் 'வஸ்டாடு நா ராஜூ', 'மிஸ்டர் பெர்ஃபக்ட்', 'வீரா', 'மோகுடு' என அடுத்தடுத்து அதகளம் செய்தார். அதேநேரம், அக்கட தேசமான மலையாளத்திலும் 'டபுள்ஸ்' படத்தின் மூலம் கெத்தாக என்ட்ரி கொடுத்தார்.

  கோலிவுட், டோலிவுட், பாலிவுட்

  கோலிவுட், டோலிவுட், பாலிவுட்

  நட்சத்திரங்கள் சுருண்டு விழுவதைப் போன்ற சுருள் முடியும், திராட்சையின் வசீகரம் கொண்ட டாப்ஸியின் கருவிழிகளும், ரசிகர்களின் மனதில் அடர்த்தியாக பதிந்துவிட்டன. அதுமட்டுமா? குழந்தைத்தனமான கேரக்டர் என்றாலும் சரி, சுட்டித்தனமான சேட்டைகள் நிறைந்த பாத்திரம் ஆனாலும், அதில் டாப்ஸியின் மேஜிக்கை கண்டிப்பாக பார்க்க முடியும். அதனால், கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என ரவுண்டு கட்டத் தொடங்கினார்.

  சிறந்த படங்கள்

  சிறந்த படங்கள்

  டாப்ஸியின் நடிப்பில் பல படங்கள் வெளியானாலும், ஒருசில படங்கள் அவரது நடிப்பு திறமைக்கு சான்றுகளாக அமைந்தன. அதில், குறிப்பாக தமிழில் வெளியான 'ஆடுகளம்', 'காஞ்சனா 2' கேம் ஓவர்', இந்தியில் 'பிங்க்', 'தப்பட்' ஆகிய படங்களைக் கூறலாம். மேலும், சில படங்களிலும் டாப்ஸியின் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன.

  பயோபிக் நாயகி

  பயோபிக் நாயகி

  சில வருடங்களாகவே பயோபிக் படங்கள் அதிகம் வெளியாகின்றன. இப்படியான படங்கள் யாருடைய வாழ்க்கை வரலாற்றை பின்னணியாகக் கொண்டு உருவாகிறாதோ, அவரைப் போன்றே மாற வேண்டிய கட்டாயம் நடிகர்களுக்கு உண்டு. மிகவும் சவாலான இதனை, டாப்ஸி மிகச் சாதாரணமாக நடித்துக் காட்டினார். இந்திய தடகள வீரங்கனையான ராஷ்மி விராஹ் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு உருவான 'ராஷ்மி ராக்கெட்' படத்தில், டாப்ஸி அமர்க்களம் செய்திருப்பார். அவரது அர்ப்பணிப்பு மிக்க நடிப்பு பலரையும் கவர்ந்தது.

  சபாஷ் டாப்சி

  சபாஷ் டாப்சி

  அதேபோல் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ்ஜின் பயோ பிக்காக உருவாகிய 'சபாஷ் மித்து' படத்திலும், தேர்ந்த கிரிக்கெட் வீரரைப் போல சுழன்றடித்திருப்பார் டாப்ஸி. சினிமாவைப் போலவே பொதுவாழ்விலும் அதிரடி காட்டுவதில் டாப்ஸி என்றுமே தவறியதில்லை. சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கும் டாப்ஸி, அவரது கருத்துகளுக்கு எதிராக வரும் பதிவுகளை பார்த்து, சமூக வலைத்தளங்கள் எல்லாம் ரியாலிட்டியாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

  Recommended Video

  என் மனைவிதான் வெற்றிக்கு காரணம் | Director Deepak Sundarrajan Exclusive | Filmibeat Tamil
  பிரபலங்கள் வாழ்த்து

  பிரபலங்கள் வாழ்த்து

  இந்நிலையில், நடிகை டாப்ஸிக்கு சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டாப்ஸியும் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

  English summary
  Happy Birthday to Vellavilavachu Velutha Pullai Taapsee
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X