நடிகை ஷாமிலிக்கு இன்று பிறந்தநாள்.. ரசிகர்கள் வாழ்த்து !

சென்னை : தமிழ் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகியாக வெற்றி வலம் வருபவர் நடிகை ஷாமிலி.

அஞ்சலி, தைப்பூசம், போன்ற படங்களின் மூலம் மிகவும் பிரபலமான குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த ஷாமிலி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

ஜூலை 10 ஆம் தேதியான இன்று இவர் தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். குழந்தை நட்சத்திரமாக நமக்கு மிகவும் பரிச்சயமானவர் தற்பொழுது கதாநாயகியாக வலம் வரும் ஷாமிலிக்கு அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களைச் கூறி வருகின்றனர்.

சிறுவயதில் நடித்த

சிறுவயதில் நடித்த

ஒரு சில திரைப்படங்கள் எவ்வாறு நம் மனதில் நீங்கா இடத்தைப் பெற்றிருக்கிறதோ அதேபோன்று அந்த படங்களில் நடக்கும் சிறுசிறு கதாபாத்திரங்களும் சில சமயங்களில் நம் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும். அவ்வாறு ஷாமிலி சிறுவயதில் நடித்த அனைத்து படங்களும் பலதரப்பட்ட மக்களையும் கவர்ந்து வந்தது.

மாற்றுத்திறனாளி குழந்தையாக

மாற்றுத்திறனாளி குழந்தையாக

ராஜநடை, அஞ்சலி, மலூடி போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மிகவும் பிரபலமான ஷாமிலி துர்கா, தைப்பூசம், செந்தூர தேவி போன்ற கடவுள் படங்களில் நடித்து பலருக்கும் இவர் தெய்வக் குழந்தையாக தெரிய ஆரம்பித்தார். இயக்குனர் மணிரத்னம் இயக்கிய அஞ்சலி திரைப்படத்தில் மாற்றுத்திறனாளி குழந்தையாக நடித்த அஞ்சலிக்கு சிறந்த நடிப்புக்காக தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

துர்கா திரைப்படம்

துர்கா திரைப்படம்

மேலும் இவர் இயக்குனர் ராமநாராயணன் இயக்கிய பல கடவுள் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர். குறிப்பாக ராமநாராயணன் இயக்கி துர்கா படம் இவர் நடிப்பில் வெளியாகி சக்கைப் போடு போட்டு வசூலை வாரி குவித்தது. இந்நிலையில் இந்த படம் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு அங்கு மிகப்பெரிய வெற்றியடைந்தது.

கதாநாயகியாக அறிமுகமாகி

கதாநாயகியாக அறிமுகமாகி

இவ்வாறு குழந்தை நட்சத்திரமாக நம் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான ஷாமிலி தெலுங்கில் வெளியான ஓய் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார். இவ்வாறு குழந்தை நட்சத்திரமாக இருந்து தற்பொழுது கதாநாயகியாக அறிமுகமாகி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்து ஷாமிலி தற்போது தெலுங்கு, தமிழ், மலையாளம் என பல்வேறு மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.

வீரசிவாஜி திரைப்படத்தின்

வீரசிவாஜி திரைப்படத்தின்

தமிழில் இவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் இருந்தாலும் கதாநாயகியாக விக்ரம்பிரபு நடித்த வீரசிவாஜி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் செய்யப்பட்டார். இவ்வாறு குழந்தை நட்சத்திரமாகவும் கதாநாயகியாகவும் நமக்கு மிகவும் பிரபலமான ஷாமிலி தல அஜித்தின் மனைவியும் மற்றும் நடிகையுமான ஷாலினியின் உடன்பிறந்த சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

மகிழ்ச்சியுடன்

மகிழ்ச்சியுடன்

இவ்வாறு குழந்தை நட்சத்திரமாகவும் கதாநாயகியாகவும் பல படங்களில் நடித்து தமிழ், தெலுங்கு என பல ரசிகர்களை கொண்டுள்ள ஷாமிலி இன்று தனது பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்.

பிறந்தநாள்

பிறந்தநாள்

ஜூலை 10 ஆம் தேதியான இன்று இவர் தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி இவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் திரைப் பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களைச் சொல்லி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X