ஹேப்பி பர்த்டே விக்னேஷ் சிவன்.. நயன்தாரா உடன் நானும் ரவுடி தான் இயக்குநரின் அழகான காதல் தருணங்கள்!

சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவனின் 35வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார் விக்னேஷ் சிவன்.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை காதலித்து வரும் விக்னேஷ் சிவன் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட அழகான காதல் தருணங்களை இங்கே காண்போம்.

ஹாலிவுட்டில்

ஹாலிவுட்டில்

கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் நயன்தாராவுடன் கலிபோர்னியாவில் உள்ள வெஸ்ட் ஹாலிவுட்டில் எடுத்துக் கொண்ட கலர்ஃபுல்லான புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ஒட்டுமொத்த கோலிவுட்டையும் பொறாமை பட செய்தார். பிரபல பாடகி பியோன்ஸின் கச்சேரியை இருவரும் கண்டு ரசித்தனர்.

எனக்கு கல்யாண வயசு தான் வந்துடுச்சுடி

எனக்கு கல்யாண வயசு தான் வந்துடுச்சுடி

2018ம் ஆண்டு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அவர்களின் பெயரில் உள்ள முதல் எழுத்துக்களான N மற்றும் V எழுத்துக்கள் இடம்பெற்ற தொப்பிகளை அணிந்து முகத்தை மறைத்தும், முகத்தை காட்டியும் வெளியிட்ட புகைப்படங்கள் வேற லெவலில் வைரலாகின. மேலும், அதற்கு கேப்ஷனாக கோலமாவு கோகிலா படத்தில் வரும் எனக்கு கல்யாண வயசு தான் வந்துடுச்சுடி பாடல் வரிகளையும் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார். (இன்னமும் அதே பாடல் தான்)

என்னோட விருதுடன்

என்னோட விருதுடன்

அதே 2018ம் ஆண்டு விஜய் டிவி விருதுகளை வாங்கிய நயன்தாராவுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை பதிவிட்டு, என்னோட விருது, அவங்களோட விருதுகளுடன் என விக்னேஷ் சிவன் கொடுத்த கேப்ஷனை நடிகை அனு இம்மானுவேல் முதல் ஏகப்பட்ட பிரபலங்களும் ரசிகர்களும் லைக் செய்து இருந்தனர்.

காதலும் நட்பும்

காதலும் நட்பும்

2018ம் ஆண்டு நண்பர்கள் தினத்தை முன்னிட்டு, நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் மூக்கை மூக்கு உரசும் படி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்ட நம்ம பர்த்டே பாய் விக்னேஷ் சிவன், நட்புக்குள் காதல், காதலுக்குள் நட்பு என ஒரே கவிதை மழை பொழிந்து நண்பர்கள் தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.

கன் இன் காதலி

கன் இன் காதலி

நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு 3 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த அழகி உடன் கோலமாவு கோகிலா படத்தின் கன் இன் காதல் பாடலுக்கு வொர்க் பண்ணுவதில் செம சந்தோஷம் என ஷூட்டிங் ஸ்பாட்டில் தனியாக இருவரும் எடுத்துக் கொண்ட செஃல்பி புகைப்படமும் ரசிகர்களின் ஃபேவரைட் புகைப்படமாக மாறியது.

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி

வெள்ளை நிற சுடிதாரில் நெற்றியில் திருநீரு, குங்குமம் இட்டு பக்தி பரவசமாக விநாயகர் சதுர்த்தியை தனது காதலன் விக்னேஷ் சிவன் உடன் கொண்டாடிய புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பலரையும் பொறாமை கொள்ள செய்தார் விக்னேஷ் சிவன்.

பொற்கோயில்

பொற்கோயில்

அம்ரிதசரஸில் உள்ள பொற்கோயிலுக்கு காதலி நயன்தாராவுடன் விசிட் அடித்த இயக்குநர் விக்னேஷ் சிவன், அங்கே இரவு பகலாக எடுத்துக் கொண்ட ஏகப் பட்ட புகைப்படங்களை தனது ரசிகர்களுக்கு ஷேர் செய்து மகிழ்ந்தார். மேலும், எந்தவொரு மதத்தினரும் பொற்கோயிலுக்கு வந்து வழிபடலாம் என்பதையும் பதிவிட்டு இருந்தார்.

நயன் பர்த்டே

நயன் பர்த்டே

செம டெக்கரேஷன் உடன் அந்த ஆண்டு நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை அவருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார் விக்னேஷ் சிவன். அதன் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வேற லெவலில் டிரெண்ட் ஆகின. என் தங்கத்துக்கு சின்ன சர்ப்ரைஸ் என அதற்கு கேப்ஷனும் கொடுத்து இருந்தார் நம்ம லவ்லி இயக்குநர்.

போன வருஷம்

போன வருஷம்

கடந்த ஆண்டு விக்னேஷ் சிவன் பிறந்தநாள் அன்று இருவரும் பிளாக் கலர் டிரெஸ் அணிந்து கொண்டு படு ரொமான்டிக்காக எடுத்துக் கொண்ட காதல் தருண புகைப்படங்களை ரசிகர்களுக்கு ஷேர் செய்து எப்போ தாங்க உங்க கல்யாணம் என்ற கேள்வியை மீண்டும் எழுப்ப வழிவகை செய்தனர்.

கிருஸ்துமஸ் கொண்டாட்டம்

கிருஸ்துமஸ் கொண்டாட்டம்

விக்னேஷ் சிவன் உடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை மொபைல் போனில் காட்டியபடி கடந்த ஆண்டு கிருஸ்துமஸ் பண்டிகையை இருவரும் கொண்டாடிய புகைப்படங்கள் ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவையும் ஆட்சி செய்தது. கிருஸ்துமஸ் மற்றும் நியூ இயர் கொண்டாட்டங்களுக்காக இருவரும் அமெரிக்கா சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

வேற லெவல் ஓணம்

வேற லெவல் ஓணம்

காத்துவாக்குல 5 வருஷமா இருவரும் காதலித்து வரும் நிலையில், இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை நயனும் விக்கியும் வேற லெவலில் கொண்டாடினார்கள். தனி விமானத்தில் விக்கியுடன் கொச்சின் பறந்த நயன்தாரா அங்கே தனது வீட்டில் எடுத்துக் கொண்ட ஓணம் புகைப்படங்கள் பலரையும் வாய் பிளக்க செய்தன.

இந்த வருஷம் எப்படி

இந்த வருஷம் எப்படி

கேரளாவுக்கு சென்றுள்ள நயன்தாராவும் விக்னேஷ் சிவனும், சமீபத்தில் நயன்தாராவின் அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடினார்கள். மேலும், விக்னேஷ் சிவனின் பிறந்தநாளையும் கேரளாவிலே கொண்டாட இருவரும் திட்டமிட்டுள்ளனர். இந்த வருஷம் பிறந்தநாள் எப்படி கொண்டாடப்பட்டது என்பதை சீக்கிரமே விக்கி அப்டேட் செய்வார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஹேப்பி பர்த்டே விக்னேஷ் சிவன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X