விஜய் ஆண்டனி பிறந்த நாள் ஸ்பெஷல்.. சமூகவலைத்தளங்களில் தெறிக்கும் வாழ்த்துக்கள்!

சென்னை : இசையின் மூலம் நம் அனைவரையும் கட்டிப்போட்டு பின் நடிப்பில் தனக்கேன தனி ஸ்டைல், தனி பாணியை வகுத்துக்கொண்டு பெண்களின் நாயகனாக வளர்ந்து வரும் விஜய் ஆண்டனி, இன்று தனது பிறந்தநாளை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்.

சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தனக்கென ஒரு நிரந்தர இடத்தை தக்க வைத்துக் கொண்டு தற்பொழுது வெற்றிகரமான நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் ஆண்டனி.

இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் தன்மைக்கொண்ட விஜய் ஆண்டனி தமிழில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்தும் தயாரித்தும் வருகிறார்.

சுக்ரன் படத்தின் மூலம்

சுக்ரன் படத்தின் மூலம்

ஆரம்பமே அமர்க்களமாக மிகப்பிரபலமான திரைப்படங்களில் இசை அமைக்க ஆரம்பித்த விஜய் ஆண்டனி தளபதி விஜய்யின் அப்பாவும் இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் உருவான சுக்ரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே அதிரடி

முதல் படத்திலேயே அதிரடி

இவ்வாறு இவர் இசையமைத்த முதல் படத்தின் பாடல்களே சூப்பர் டூப்பர் ஹிட்டாகி அனைவரையும் ரசிக்க வைத்த நிலையில் பலரும் "யாருடா இந்த மியூசிக் டைரக்டர்" என தேட வைத்தது. இவ்வாறு தான் இசையமைத்த முதல் படத்திலேயே அதிரடி காட்டிய விஜய் ஆண்டனி நகுல் அறிமுகமான காதலில் விழுந்தேன் திரைப்படத்திற்கு இசையமைத்ததின் மூலம் உலகின் பல்வேறு நாடுகளில் சிறந்த இசையமைப்பாளருக்கான அங்கீகாரத்தை பெற்று கெத்தாக வலம் வந்தார்.

உலக கிரிக்கெட் கோப்பை போட்டியில்

உலக கிரிக்கெட் கோப்பை போட்டியில்

குறிப்பாக காதலில் விழுந்தேன் திரைப்படத்தில் வரும் "நாக்க முக்க" என்ற குத்துப் பாடல் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் பட்டிதொட்டி எங்கும் அனைத்து இடங்களிலும் பரவி மொழி தெரியாதவர்கள் கூட இந்த பாட்டுக்கு நடனமாடி நாக்க முக்கா பாடலை வேற லெவல் வைரல் ஆக்கினார். மேலும் இந்தப் பாடல் 2011ம் ஆண்டு உலக கிரிக்கெட் கோப்பை போட்டியில் ஒளிபரப்பப்பட்டு சிறப்பு அந்தஸ்தை பெற்றது.

விஜய் ஆண்டனி ஹீரோவாக

விஜய் ஆண்டனி ஹீரோவாக

தனது தனித்துவமான இசைக்கு உலக அரங்கில் பலரையும் அடிமையாக்கிய விஜய் ஆண்டனி இசையமைக்க ஆரம்பித்த சில படங்களுக்குப் பிறகு நடிப்பிலும் மாஸ் காட்டினார். 2012 ஆம் ஆண்டு வெளியான "நான்" திரைப்படத்தின் மூலம் யாரும் சற்றும் எதிர்பாராத நிலையில் விஜய் ஆண்டனி ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.

பல காட்சிகள் வெறிச்சோடி

பல காட்சிகள் வெறிச்சோடி

இவ்வாறு ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய விஜய் ஆண்டனிக்கு பல்வேறு திசையில் இருந்தும் எதிர்மறை கருத்துக்கள் வந்தது. நல்லாதானே மியூசிக் போட்டுகிட்டு இருந்த அப்புறம் எதுக்கு உனக்கு இந்த வேண்டாத வேலை உனக்கெல்லாம் நடிப்பு செட் ஆகாது என பலரும் இவரை எதிர்மறையான சொற்களில் பேசிய நிலையில், ‘நான்‘ திரைப்படமும் வெளியாகி ஓரிரு நாட்கள் பல காட்சிகள் வெறிச்சோடி இருந்து, பின் மக்களின் பேராதரவால் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்து விஜய் ஆண்டனிக்கு முதல் படமே திருப்புமுனையாக அமைந்தது.

பலரையும் ரசிக்க வைத்து

பலரையும் ரசிக்க வைத்து

நான் திரைப்படத்தின் கதாபாத்திற்கு ஏற்றால் போல அமைதியான முகம், எதார்த்தமான நடிப்பு என அனைத்திலும் அசத்தி இருப்பார் விஜய் ஆண்டனி. அன்றில் இருந்து இன்று வரை பல்வேறு திரைப்படங்களில் வித்தியாச வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்து எடுத்து அனைவரும் வாயடைந்து போகும் அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

இயக்குனர் பிரியா கிருஷ்ணசுவாமி

இயக்குனர் பிரியா கிருஷ்ணசுவாமி

இந்நிலையில் சென்ற ஆண்டு தேசிய விருது பெற்று தமிழ் சினிமாவை இந்திய அளவில் கொண்டு சேர்த்த "பாரம்" என்ற எதார்த்தமான திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பிரியா கிருஷ்ணசுவாமி புதிதாக இயக்கயிருக்கும் படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கிறார்.

பிறந்தநாள்

பிறந்தநாள்

இவ்வாறு படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் ஆண்டனி ஜூலை 24 ஆம் தேதியான இன்று தனது 45வது பிறந்தநாளை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார். மேலும் இவருக்கு நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த பல்வேறு நபர்களும் வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X