அப்பாவுக்கு பர்த்டே.. வனிதா விஜயகுமார் வாழ்த்து.. குழந்தையில எவ்ளோ க்யூட்டா இருக்காங்க பாருங்க!

சென்னை: அப்பா விஜயகுமாருக்கு ஹேப்பி பர்த்டே என நடிகை வனிதா விஜயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார்.

பழம்பெரும் நடிகர் விஜயகுமார் இன்று தனது 77வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

1961ம் ஆண்டு குழந்தை முருகனாக ஸ்ரீவள்ளி படத்தில் நடித்து சினிமா உலகுக்கு அறிமுகமான இவர், நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்டார்.

60 ஆண்டுகள்

60 ஆண்டுகள்

கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார் விஜயகுமார். ஏகப்பட்ட படங்கள், ஏகப்பட்ட கதாபாத்திரங்கள், சின்னத்திரை தொடர்கள் என கலை உலகிற்கு இவர் செய்துள்ள பணி அளப்பறியது. நடிகர் விஜயகுமாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

நட்சத்திரக் குடும்பம்

நட்சத்திரக் குடும்பம்

சினிமாவில் தனது குடும்பத்தை மொத்தமாக களமிறக்கிய புகழும் நடிகர் விஜயகுமாருக்கே சேரும். எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு ஜோடியாக நடித்த நடிகை மஞ்சுளா மனைவி. அருண் விஜய், வனிதா விஜயகுமார், ப்ரீத்தா விஜயகுமார் மற்றும் ஸ்ரீதேவி விஜயகுமார் என தனது குழந்தைகளையும் சினிமாவில் நடிகர்களாக உருவாக்கினார் விஜயகுமார்.

மறக்க முடியாத கதாபாத்திரங்கள்

மறக்க முடியாத கதாபாத்திரங்கள்

ஹீரோ, வில்லன், குணசித்ர நடிகர் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், விஜயகுமார் நடிப்பில் காலத்தால் அழிக்க முடியாத சில கதாபாத்திரங்களும் உள்ளன. மணிரத்னத்தின் அக்னி நட்சத்திரம், பாரதி ராஜாவின் கிழக்குச் சீமையிலே, நாட்டாமை, பாட்ஷா என ஏகப்பட்ட சிறப்பான கதாபாத்திரங்களில் விஜயகுமார் கலக்கி உள்ளார்.

அப்பாவுக்கு வாழ்த்து

அப்பாவுக்கு வாழ்த்து

வனிதா விஜயகுமார் தனது மகளே இல்லை என்றும், அவர் மீது போலீஸ் புகார் அளித்தும் பிரிந்து இருக்கும் நிலையில், தற்போது தனது அப்பா விஜயகுமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் நடிகை வனிதா விஜயகுமார். கூடவே, குழந்தை பருவத்தில் செம க்யூட்டாக அவர் அப்பாவுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் வாழ்த்து

77 வயதிலும் கம்பீரம் குறையாமல், பல சீரியல்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் விஜயகுமார். விக்ரமின் சாமி, சூர்யாவின் சிங்கம் உள்ளிட்ட படங்களில் முக்கிய ரோல்களில் நடித்து வரும் இவருக்கு, இன்னமும் கூட சூப்பரான ரோல் கிடைக்க வேண்டும் என்றும் அதற்கு முற்றிலும் தகுதியானவர் இவர் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X