விஜய்யின் 'லேட்டஸ்ட் டார்லிங்'கிற்கு இன்று பிறந்தநாள்

By Siva

சென்னை: விஜய்யின் லேட்டஸ்ட் டார்லிங் யோகி பாபுவுக்கு இன்று பிறந்தநாள்.

நெல்சன் இயக்கியுள்ள கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு ரூட்டு விட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் யோகி பாபு. சர்கார் படப்பிடிப்பு தளத்தில் பெண் வேடமிட்டு அமர்ந்திருந்த யோகி பாபுவின் கன்னத்தை விஜய் பிடித்து கிள்ளியபோது எடுக்கப்பட்ட வீடியோவை வரலட்சுமி சரத்குமார் ட்விட்டரில் வெளியிட்டார்.

Happy Birthday Yogi Babu

அந்த வீடியோ வைரலானது. கோலிவுட்டில் பிசியாக இருக்கும் யோகி பாபு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவிடம் பிறந்தநாள் வாழ்த்தை கேட்டு வாங்கிய வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு ரசிகர்களிடமும் வாழ்த்து கேட்டுள்ளார் யோகி பாபு.

யோகி பாபுவின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

விஜய் சேதுபதியுடன் யோகி பாபு சேர்ந்து நடித்த ஜுங்கா படம் வரும் 27ம் தேதி ரிலீஸாக உள்ளது. யோகி பாபு விஜய்யின் சர்கார், அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

யோகியின் நடிப்பை பார்த்துவிட்டு நயன்தாரா அவரை தான் நடிக்கும் புதிய படத்திலும் பரிந்துரை செய்து நடிக்க வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X