தந்தையர் தினம்: கோலிவுட்டின் நட்சத்திர தந்தைகள் ஒரு பார்வை
சென்னை: தந்தையர் தினமான இன்று கோலிவுட்டின் நட்சத்திர தந்தைகள் பற்றி பார்ப்போம்.
உலகம் முழுவதும் இன்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு குழந்தையின் முதல் குரு தந்தை தான். திரையுலகில் உள்ள நட்சத்திர தந்தைகள் என்ன தான் ஷூட்டிங் ஷூட்டிங் என்று சென்றாலும் தங்கள் குழந்தைகளுக்கு வேண்டிய நேரத்தில் அவர்களுடன் இருக்கிறார்கள்.
இந்த தந்தையர் தினத்தில் கோலிவுட்டின் சில நட்சத்திர தந்தைகளைப் பார்ப்போம்.

ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பொறுப்புள்ள தந்தையாக தனது மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யாவுக்கு நல்ல வழிகளை காண்பித்துவிட்டார். அவர்களும் தங்கள் வழியில் வாழ்வில் முன்னேறி வருகின்றனர்.

கமல் ஹாசன்
கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி நடிப்பைத் தேர்வு செய்துள்ளார். இளைய மகள் அக்ஷராவுக்கு நடிக்க வாய்ப்புகள் வந்தும் அவர் கேமராவுக்கு பின்னால் இருக்க விரும்புகிறார்.

சரத்குமார்
நாட்டாமை சரத்குமார் 3 பெண்கள் மற்றும் 1 ஆண் குழந்தைக்கு தந்தை. அவரது மூத்த மகள் வரலக்ஷ்மி தந்தையின் வழியில் நடிக்க வந்துள்ளார்.

அர்ஜுன்
ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா பட்டத்து யானை படம் மூலம் நாயகியாகி உள்ளார்.

விக்ரம்
சீயான் விக்ரமுக்கு அக்ஷிதா என்ற மகளும், த்ருவ் என்ற மகனும் உள்ளனர். தனது மகனுக்கு நடிப்பில் ஆர்வம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

விஜய்
இளைய தளபதி விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா ஷாஷா என்ற மகளும் உள்ளனர்.

அஜீத் குமார்
'தல' அஜீத் குமாருக்கு அனௌஷ்கா என்ற மகள் உள்ளார்.

சூர்யா
சூர்யாவுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர்.

தனுஷ்
தனுஷுக்கு யாத்ரா, லிங்கா என்ற 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் தாத்தா ரஜினி செல்லம் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்தி
கார்த்திக்கு உமையாள் என்ற மகள் உள்ளார்.

ஜெயம் ரவி
ஜெயம் ரவிக்கு ஆரவ் என்ற மகன் உள்ளார்.

ஜீவா
ஜீவாவுக்கு ஸ்பர்ஷ் என்ற மகன் உள்ளார்.


Click it and Unblock the Notifications











