For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பண்டரி பாய் முதல் வரை.. ஐஸ்வர்யா ராஜேஷ் வரை சினிமாவில் கலக்கிய அம்மாக்கள்.. அன்னையர் தின ஸ்பெஷல்!

  |

  சென்னை: மே 10ம் தேதி அன்னையர் தினம் கொண்டாடும் அனைத்து அம்மாக்களுக்கும் எங்களுடைய அன்பான அன்னையர் தின வாழ்த்துக்கள்.

  Anchor DD & Priyanka Great gesture of Humanity | Dheena Thanking Video

  தமிழ் சினிமாவில் காலம் காலமாக 'அம்மா' கதாபாத்திரத்திற்கு தனி சிறப்பும் மரியாதையும் கொடுக்கப்பட்டே வருகிறது.

  அம்மா கதாபாத்திரத்தை தமிழ் சினிமாவில் அன்பும் பாசமும் குறையாமல் கச்சிதமாக செய்து வந்த நடிகைகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

  பட வாய்ப்புக்காக.. அந்த மோசமான அனுபவத்தை நானும் எதிர்கொண்டேன்.. பிரபல பிக்பாஸ் நடிகை பகீர் தகவல்!பட வாய்ப்புக்காக.. அந்த மோசமான அனுபவத்தை நானும் எதிர்கொண்டேன்.. பிரபல பிக்பாஸ் நடிகை பகீர் தகவல்!

  குடியிருந்த கோயில்

  குடியிருந்த கோயில்

  எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களுக்கு சில படங்களில் ஜோடியாக நடித்துள்ள நடிகை பண்டரி பாய், அவர்களுக்கு அம்மாவாகவும் நடித்து அப்போதே அசத்தியுள்ளார். குடியிருந்த கோயில், அடிமைப் பெண் என எம்.ஜி.ஆருக்கு பல படங்களில் அம்மாவாக நடித்து, தமிழ் சினிமாவின் அம்மா நடிகைக்கான இலக்கணத்தை வகுத்து கொடுத்தவர் பண்டரி பாய். மன்னன் படத்தில் ரஜினிக்கும், எனக்குள் ஒருவன் படத்தில் கமலுக்கும் அம்மாவாக நடித்துள்ளார்.

  கோலிவுட் அம்மா

  கோலிவுட் அம்மா

  சமீப காலமாக அம்மா கதாபாத்திரம் என்றால் உடனடியாக முதல் தேர்வாக வருவது நடிகை சரண்யா பொன்வண்ணன் தான். தவமாய் தவமிருந்து, ராம், களவாணி, தென்மேற்கு பருவக்காற்று, ஒரு கல் ஒரு கண்ணாடி, வேலையில்லா பட்டதாரி, கோலமாவு கோகிலா என அம்மா கதாபாத்திரத்திலேயே எத்தனை வித நடிப்பை கொடுக்க முடியுமோ அத்தனை விதத்திலும் நடித்து அசத்தி வருகிறார்.

  எம். குமரன் சன் ஆஃப் மகாலக்‌ஷ்மி

  எம். குமரன் சன் ஆஃப் மகாலக்‌ஷ்மி

  80, 90களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த நடிகை நதியா, ஜெயம் ரவி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான எம். குமரன் சன் ஆஃப் மஹாலக்‌ஷ்மி படத்தில், கணவனை பிரிந்து பிள்ளைகளை வளர்க்க போராடும் ஒவ்வொரு சூப்பர் மாம்களின் உதாரணமாக நடித்து அசத்தி இருப்பார்.

  சிவா மனசுல சக்தி

  சிவா மனசுல சக்தி

  உலகநாயகன் கமல், பாண்டியராஜன், பாக்கியராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நடிகை ஊர்வசி, 2009ம் ஆண்டு வெளியான சிவா மனசுல சக்தி படத்தில் நடிகர் ஜீவாவுக்கு அம்மாவாக நடித்து தியேட்டர்களில் சிரிப்பு அலைகளை தெறிக்கவிட்டு இருப்பார். அம்மாவே மகனை கலாய்க்கும் காட்சிகள் எல்லாம் அட்டகாசம்.

  தெறி

  தெறி

  அட்லி இயக்கத்தில் தளபதி விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பில் வெளியான தெறி படத்தில் அம்மாவாக நடித்து இருப்பார் நடிகை ராதிகா சரத்குமார். சின்னத்திரைகளில் சித்தியாக கலக்கிய அவர், வெள்ளித்திரையில், விஜய்க்கு அம்மாவாக நடித்து அசத்தி இருப்பார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படத்திலும் அம்மா கதாபாத்திரத்தில் அசத்தியிருப்பார்.

  காக்கா முட்டை

  காக்கா முட்டை

  பொதுவாக ஹீரோயினாக நடித்து, சில காலம் கடந்த பிறகு மார்க்கெட் காலியானால், நடிகைகள் அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க சம்மதிப்பார்கள். ஆனால், ஹீரோயினாக அறிமுகமான உடனே காக்கா முட்டை படத்தில், இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து அசத்தியிருப்பார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தேசிய விருது பெற்ற அந்த படத்தில் அம்மாவாக நடித்த பிறகு தான் வடசென்னை, கனா என ஐஸ்வர்யா ராஜேஷ் மார்க்கெட்டே உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

  அன்னையர் தினத்தன்று மட்டுமின்றி, ஒவ்வொரு நாளும் அம்மாவை வணங்கி போற்றிடும் பிள்ளைகளாய் வாழ்ந்திடுவோம்!

  English summary
  Every plot may include or exclude a few characters here and there but a mother is irreplaceable even in a story. Today, we take a look at five most loved Ammas of Kollywood who are etched in our memories through the performances.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X