அன்னையர் தினம் 2022… திரைப்பிரபலங்கள் வாழ்த்து!
சென்னை : இந்தியாவில் மே 8ஆம் தேதியாகிய இன்றைய தினம் "அன்னையர் தினம்" என்று கொண்டாடப்படுகிறது.
தாய்மையை கொண்டாடுவது என்பது நீண்ட காலமாக மனித வரலாற்றின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. தாய்மார்களின் இருப்பு மற்றும் மக்களின் வாழ்வில் அவர்களின் முக்கியத்துவத்தை போற்றும் வகையில் இந்த நாள் நினைவுகூரப்படுகிறது.
அன்னையர் தினத்தை முன்னிட்டு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அன்னையர் தினம்
என்னதான் நம்மை சுற்றி ஆயிரமாயிரம் பந்தங்கள் இருந்தாலும், என்றுமே அம்மா என்றொரு உறவு ஸ்பெஷல் தான். சொல்லப்போனால் அன்பின் உருவகமாக, நற்பண்புகளுக்கு எடுத்துக் காட்டாக, மொத்தத்தில் எல்லோருக்கும் பிடித்தமான உறவு அம்மா தான். அப்படிப்பட்ட அம்மாக்களுக்கு அன்னையர் தின வாழ்த்துகள்.

மகனுடன் வாழ்த்து
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இளைய மகன் லிங்காவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அன்னையர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அம்மாவுடன்
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். அன்னையர் தினத்தில் தனது அம்மாவுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார்.

ரம்யா பாண்டியன்
தமிழில் ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் ரம்யா பாண்டியன். டம்மி டப்பாசு, ஆண் தேவதை, ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தனது அம்மா மற்றும் தங்கையுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து அனைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நானி
நானி ஏற்கனவே தமிழில் வெப்பம், நான் ஈ ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகரான நானி தனது அம்மாவுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டு அன்னையர் தினம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications