அக்ஷரா ஹாஸனுடன் காதலா?: கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த விவான்
மும்பை: கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷராவை காதலிக்கிறீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு நடிகர் விவான் ஷா பதில் அளிக்காமல் மழுப்பிவிட்டார்.
கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா கேமராவுக்கு பின்னால் தான் இருப்பேன் என்ற முடிவில் இருந்தார். ஆனால் காலம் அவரை நடிகையாக்கிவிட்டது. ஆர். பால்கி இயக்கியுள்ள ஷமிதாப் இந்தி படத்தில் அக்ஷரா தான் ஹீரோயின். தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் அமிதாப் பச்சனும் உள்ளார்.

அக்ஷரா பிரபல இந்தி நடிகர் நசீருத்தீன் ஷாவின் இளைய மகன் விவான் ஷாவை காதலிப்பதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. விவான் ஷா பெற்றோர் வழியில் நடிகராகிவிட்டார். ஃபரா கான் இயக்கத்தில் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸான ஹேப்பி நியூ இயர் படத்தில் விவான் ஷாவும் நடித்துள்ளார்.
விவானை பார்த்த செய்தியாளர்கள் அவரிடம் நீங்கள் அக்ஷரா ஹாஸனை காதலிப்பதாக கூறப்படுகிறதே என்று கேட்க அவரோ அந்த கேள்விக்கு பதில் அளிக்கவில்லை. சாரி, இது பற்றி நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஹேப்பி நியூ இயர் ஆடிஷனுக்காக ஃபரா கான் என்னை அழைத்தார். அப்போது அது ஷாருக்கான் படம் என்று எனக்கு தெரியாது. 24 ஆண்டுகள் கழித்து 7 கூன் மாப் படத்தில் பிரியங்கா சோப்ராவுடனும், ஹேப்பி நியூ இயரில் தீபிகா படுகோனேவுடனும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. என் வயதுடைய எத்தனை நடிகர்களுக்கு இது போன்ற வாய்ப்புகள் கிடைக்கும் என்றார்.


Click it and Unblock the Notifications











