மூன்றே நாட்களில் ரூ.108 கோடி: பாக்ஸ் ஆபீஸில் ஹேப்பி நியூ இயர் வசூல் வேட்டை
மும்பை: ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்த ஹேப்பி நியூ இயர் படம் ரிலீஸான மூன்றே நாட்களில் ரூ.108 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
ஃபரா கான் இயக்கத்தில் ஷாருக்கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே, போமன் இரானி, சோனு சூத் உள்ளிட்டோர் நடித்த ஹேப்பி நியூ இயர் படம் கடந்த 24ம் தேதி ரிலீஸானது. இந்த படம் ரிலீஸாவதற்கு முன்பே ரூ.200 கோடி சம்பாதித்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் ஹேப்பி நியூ இயர் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.

ரூ.45 கோடி
படம் ரிலீஸான முதல் நாளே ரூ.45 கோடி வசூல் செய்து சல்மான் கான், ஆமீர் கான் படங்களின் முதல் நாள் வசூலை முறியடித்தது.

ரூ.100 கோடி
தீபாவளி விடுமுறையையொட்டி ரிலீஸான ஷாருக்கின் படம் வெறும் மூன்றே நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.108 கோடி வசூல் செய்தது.

தூம் 3
ஆமீர் கானின் தூம் 3 படம் ரிலீஸான அன்று ரூ. 32 கோடி வசூல் செய்தது. இந்த சாதனையை தற்போது ஹேப்பி நியூ இயர் முறியடித்துள்ளது.

ஷாருக்கான் ஷோ
படத்தில் பெரிதாக ஒன்றும் இல்லை. ஷாருக்கான் 8 பேக்ஸை காட்டுகிறார், தீபிகா கவர்ச்சி காட்டுகிறார் என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

ராசி
ஷாருக்கான் படம் பற்றி நல்ல விமர்சனம் வராவிட்டாலும் அது கோடி கோடியாக வசூல் செய்து புதிய சாதனை படைப்பது வழக்கமாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோடி
ஓம் சாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய வெற்றிப் படங்களை அடுத்து ஷாருக், தீபிகா ஜோடி சேர்ந்த மூன்றாவது படமான ஹேப்பி நியூ இயரும் ஹிட்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











