வேற லெவல்ல இருக்கும்.. அண்ணாத்த படத்துல எஸ்.பி. பாலசுப்ரமணியம் ஓப்பனிங் சாங் பாடியிருக்காராம்!

சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்துலயும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தான் ஓப்பனிங் பாடியுள்ளார் என்கிற ஹேப்பி நியூஸ் வெளியாகி உள்ளது.

Recommended Video

பாடகர் SPB விரைவில் குணம் பெற வேண்டும் என பாட்டுப்பாடி உருகும் கவிஞர் வைரமுத்து!

கொரோனா பிடியில் சிக்கித் தவிக்கும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் குணமாகி வீடு திரும்ப ஒட்டுமொத்த இசை ரசிகர்களும் தமிழ் மக்களும் கூட்டுப் பிரார்த்தனை செய்தனர்.

அப்பா நலம் பெற வேண்டி கூட்டுப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி கடன் பட்டு இருப்பதாக எஸ்.பி.பி. சரண் உருக்கமான வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

சூப்பர் ஹிட் காம்போ

சூப்பர் ஹிட் காம்போ

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் படங்களில் மாஸ் ஓப்பனிங் பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியம் தான் பல காலமாக பாடி வருகிறார். ரஜினியின் ஸ்டைலுக்கு ஏற்றவாறு தனது குரலில் வெறியை ஏற்றிக் கொண்டு பாடி அசத்தும் அசாத்திய திறமை எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை தவிர யாருக்கும் வராது என்றே சொல்லலாம்.

எல்லாமே ஹிட் தான்

எல்லாமே ஹிட் தான்

வந்தேன் டா பால்க்காரன், ஒருவன் ஒருவன் முதலாளி, அதான் டா இதான் டா அருணாச்சலம் நான் தான் டா, நான் ஆட்டோக்காரன், சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு, தேவுடா தேவுடா, புதிய மனிதா, மரண மாஸ், சும்மா கிழி என இவர்களது காம்போவில் வெளியான அத்தனை ஓப்பனிங் பாடல்களும் தெறி மாஸ் தான்.

உடல் நலக் குறைவு

உடல் நலக் குறைவு

16 மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடிய பாடு நிலா பாலு, தற்போது கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கி சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவே உள்ளது என அவரது மகன் எஸ்.பி.பி. சரண் வெளியிட்ட வீடியோவை பார்த்து பல பிரபலங்களும் கண்ணீர் விட்டு கதறிவிட்டனர்.

கூட்டுப் பிரார்த்தனை

கூட்டுப் பிரார்த்தனை

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இளையராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர், பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, ஹாரிஷ் ஜெயராஜ், வைரமுத்து, பாரதிராஜா, பார்த்திபன், ஹரிஷ் கல்யாண், நிவின் பாலி, சிரஞ்சீவி என ஒட்டுமொத்த தென்னிந்திய பிரபலங்களும் ஒன்று சேர்ந்து நேற்று மாலை 6 மணி முதல் 6.05 வரை எஸ்.பி. பாலசுப்ரமணியம் சீக்கிரம் குணமாகி மீண்டும் வந்து மைக்கை பிடித்து பாட வேண்டும் என கூட்டுப் பிரார்த்தனை செய்தனர். பிரபலங்கள் மட்டுமின்றி அவரது கோடிக்கணக்கான ரசிகர்களும் இந்த பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.

அண்ணாத்த சர்ப்ரைஸ்

அண்ணாத்த சர்ப்ரைஸ்

இத்தனை கோடி பேரின் பிரார்த்தனை காரணமாக நிச்சயம் எஸ்.பி. பாலசுப்ரமணியம் குணமடைவார். இந்த நிலையில், அண்ணாத்த படத்தின் ஓப்பனிங் பாடலையும் ரஜினிக்காக எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியுள்ளார் என்கிற மாஸ் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. இமான் இசையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியுள்ள அந்த பாடல் வேற லெவலில் வந்திருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X