செம.. சந்தோஷமான செய்தி.. ஆண் குழந்தைக்கு அம்மாவான மைனா நந்தினி.. குவிகிறது வாழ்த்து!
சென்னை: விஜய் டிவி புகழ் மைனா நந்தினி ஆண் குழந்தைக்கு அம்மா ஆகியுள்ள சந்தோஷமான செய்தியை அவரது கணவர் அறிவித்துள்ளார்.
Recommended Video
இந்த லாக்டவுனில் ஏகப்பட்ட பிரபலங்கள் கர்ப்பமாகியும், அம்மா, அப்பா என அப்கிரேட் ஆகியும் சந்தோசத்தில் மிதந்து வருகின்றனர்.
கரை நல்லது என்பது போல கொரோனாவும் நல்லது என லாக்டவுன் விடுமுறைக்கு பலரும் நன்றி தெரிவித்து வருவது கொஞ்சம் ஓவராக இருந்தாலும் அது தான் உண்மை.

பிசியான வாழ்க்கைக்கு ஒரு பிரேக்
கொரோனா லாக்டவுன் தினக் கூலிகளை புரட்டி எடுத்த கோரம் ஒரு புறம் இருந்தாலும், கை நிறைய காசு வைத்துக் கொண்டு, கால்ஷீட் காரணமாக குடும்பத்தையே பார்க்காமல் இருந்த பல பிரபலங்களுக்கும் இந்த கொரோனா லாக்டவுன் ஒரு நல்ல பிரேக் என்றே சொல்லலாம். பெரிய நடிகர்கள் முதல் டிவி சீரியல் பிரபலங்கள் வரை குடும்ப வாழ்க்கையில் அடுத்த ஸ்டேஜை நோக்கியும் நகர இது உதவியது.

விஜய் டிவி தந்த பிரபலம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் மைனா நந்தினி. தொடர்ந்து கலக்கப் போவது யாரு நிகழ்ச்சிக்கு நடுவராகவும் பொறுப்பேற்று பிரபலமானார். அந்த பிரபலத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

நிறை மாத நிலவாக
இந்த லாக்டவுனில் ஏகப்பட்ட திரை மற்றும் சீரியல் பிரபலங்கள் கர்ப்பமாகியும், குழந்தைகளுக்கு தாயாகியும் உள்ளனர். அந்த வரிசையில் மைனா நந்தினிக்கும் ஒரு முக்கிய இடம் கிடைத்துள்ளது. சமீபத்தில், நிறை மாத கர்ப்பிணியான அவர் நடத்திய அழகான போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.

ஆண் குழந்தைக்கு அம்மா
இந்நிலையில், தற்போது நடிகை மைனா நந்தினிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், தாயும் சேயும் நலம் என மைனா நந்தினியின் கணவர் யோகேஷ்வரன் தனது சமூக வலைதள பக்கத்தில் சந்தோஷமாக அறிவித்துள்ளார். மைனா நந்தினியின் ரசிகர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











