Youth Vs Happy Raj Box office - முதல் நாளில் ஹேப்பி ராஜ் வசூல் என்ன?.. யூத்தை பாக்ஸ் ஆஃபிஸில் முந்தியதா?

சென்னை: தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜிவி பிரகாஷ். தேசிய விருதையெல்லாம் வாங்கியிருக்கும் அவர்; ஹீரோவாகவும் கலக்கிவருகிறார். அந்தவகையில் நேற்று அவரது நடிப்பில் ஹேப்பி ராஜ் திரைப்படம் வெளியானது. படம் ஹிட்டாகுமா ஆகாதா என்ற ஆவலோடு படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு படம் பெரிய திருப்தியை கொடுக்கவில்லை. இந்நிலையில் படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

கோலிவுட்டின் மிகப்பெரிய இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜிவி பிரகாஷ். சூரரைப் போற்று, வாத்தி படங்களுக்காக தேசிய விருதுகளையும் வென்றிருக்கிறார். இதற்கிடையே ஹீரோவாக நடிக்கும் ஆசை வந்துவிட; தொடர்ந்து ஹீரோவாகவும் கலக்கிவருகிறார் அவர். ஆனாலும் அவருக்கு பெரிய வெற்றி எதுவும் நடிப்பில் கிடைத்துவிடவில்லை. அதேசமயம் படத்துக்கு படம் வித்தியாசமான கதைகளைத்தான் தேர்ந்தெடுக்கிறார் ஜிவி. ஆனால் எதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Happy Raj Day 1 Box Office G V Prakash Kumar Film Collects 65 Lakh Trails Behind Youth
Photo Credit:

ஹேப்பி ராஜ் திரைப்படம்: அவர் இப்போது ஹேப்பி ராஜ் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அப்படத்தை மரியா ராஜா இளஞ்செழியன் என்பவர் இயக்கியிருக்கிறார். ஜிவியுடன் ஸ்ரீ கௌரி பிரியா, பிரதனா நாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். எப்படியாவது இந்தப் படத்திலாவது ஒரு வெற்றியை ருசித்து ஹீரோவாக தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தார் ஜிவி பிரகாஷ். இந்தப் படமானது ஓரளவுக்கு எதிர்பார்ப்போடு நேற்று திரையரங்குகளில் ரிலீஸானது.

எப்படி இருக்கு படம்?: ஆனால் படம் பெரும்பாலானோரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. படத்தின் இரண்டு பாதிகளுமே பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை; இயக்குநர் திரைக்கதையில் சொதப்பிவிட்டார் என விமர்சிக்கும் ரசிகர்கள்; ஜிவி பிரகாஷின் நடிப்பிலும் பெரிய அளவில் எதுவுமே இல்லை என்று ஓபனாக அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதன் காரணமாக சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்த்திருந்த ஜிவி பிரகாஷுக்கும், ஹேப்பி ராஜ் படக்குழுவுக்கும் கொஞ்சம் அப்செட் ஏற்பட்டுவிட்டதாகவும் திரைத்துறையில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

Also Read
மகன் அப்படியே செய்வான்.. ஜேசன் சஞ்சய் பற்றி விஜய் ஓபன்.. சங்கீதா பிரச்னை முடிவுக்கு வருமா?
மகன் அப்படியே செய்வான்.. ஜேசன் சஞ்சய் பற்றி விஜய் ஓபன்.. சங்கீதா பிரச்னை முடிவுக்கு வருமா?

வசூல் நிலவரம்: விமர்சனத்தில்தான் படம் அப்படி இப்படி பெயர் வாங்கிவிட்டது; வசூலிலாவது கண்டிப்பாக தேறும் என்றுதான் கணிக்கப்பட்டது. ஆனால் அதுவும் சரியாக இல்லை என்று தெரியவந்திருக்கிறது. Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் தகவல்படி அந்தப் படமானது முதல் நாளான நேற்று வெறும் 65 லட்சம் ரூபாயை மட்டுமே வசூலித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் பட்ஜெட்டில் ஒரு பங்கை கூட முதல் நாளில் வசூலிக்காதது குறிப்பிடத்தக்கது. எனவே இப்படம் தோல்வி பட லிஸ்ட்டில் சேர்ந்துவிடும் அபாயமும் உருவாகியிருக்கிறது.

யூத் படத்தை முந்தியதா?: குறிப்பாக வசூலில் கென் கருணாஸின் யூத் படத்தையும் ஹேப்பி ராஜ் முந்தவில்லை. அந்தப் படம் முதல் நாளில் மூன்று கோடியே 65 லட்சம் ரூபாயை வசூலித்து இதுவரை ஒன்பது நாட்களில் 30 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக சாக்நில்க் இணையதளம் கூறுகிறது. ஆனால் ஜிவியின் ஹேப்பி ராஜோ முதல் நாளில் 65 லட்சம்தான் வசூல். எனவே பாக்ஸ் ஆஃபிஸில் கென் கருணாஸின் யூத்திடம் ஹேப்பி ராஜ் தோற்று ஹேப்பியே இல்லாமல் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். முன்னதாக யூத் படத்துக்கு ஜிவி பிரகாஷ்தான் இசையமைத்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X