ரம்ஜான் ஸ்பெஷல்: அமிதாப் பச்சன் முதல் பிக் பாஸ் ஆஜீத் வரை.. ஈகைத் திருநாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து!

சென்னை: ரமலான் மாதத்தில் சிரத்தையாக நோன்பு இருந்து வந்த இஸ்லாமியர்கள் இன்று ஈகைத் திருநாளை தங்கள் வீடுகளிலேயே கொண்டாடி வருகின்றனர்.

ஒரு அண்டா பிரியாணி செய்து ஊருக்கே கொடுத்து வந்த பல இஸ்லாமியர்கள் கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் முதல் பிக் பாஸ் பிரபலம் ஆஜீத் வரை ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ள வாழ்த்துக்களை இங்கே காண்போம்.

அமிதாப் பச்சன் வாழ்த்து

அமிதாப் பச்சன் வாழ்த்து

பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார் நடிகரான அமிதாப் பச்சன் தனது ரசிகர்களுக்கு மறக்காமல் ஈகைத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். "ஈது முபாரக்" என ட்வீட் போட்டு இஸ்லாமிய சொந்தங்களுக்கு தனது ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மகேஷ் பாபு வாழ்த்து

மகேஷ் பாபு வாழ்த்து

இந்த இக்கட்டான சூழலில் இந்த ஈகைத் திருநாளின் அருள் மக்களின் துயரங்களை துடைக்கட்டும் என நடிகர் மகேஷ் பாபு தனது ட்விட்டரில் பதிவிட்டு ரசிகர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

ராய் லக்‌ஷ்மி வாழ்த்து

ராய் லக்‌ஷ்மி வாழ்த்து

அனைவருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ள நடிகை ராய் லக்‌ஷ்மி, இஸ்லாமிய பெண் போல உடை அணிந்து எடுத்துக் கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களையும் ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார்.

நிறைய ஆக்ஸிஜன் கிடைக்கணும்

நிறைய ஆக்ஸிஜன் கிடைக்கணும்

நடிகை ஆத்மிகா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ட்வீட்டில் அனைவருக்கும் அதிக அமைதி, நிறைய ஆக்ஸிஜன், நல்ல ஆரோக்கியம் கிடைக்க இறைவனை பிரார்த்தனை செய்வோம் இந்த இக்கட்டான சூழலில் என ஈகைத் திருநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

அனுபமா வாழ்த்து

அனுபமா வாழ்த்து

நடிகை அனுபமா பரமேஸ்வரனும் ரம்ஜான் ஸ்பெஷல் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு ஈகைத் திருநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். 7 லட்சத்தை தாண்டி லைக்குகள் குவிந்து வருகின்றன. பலரும் அனுபமாவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆஜீத் வாழ்த்து

ஆஜீத் வாழ்த்து

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட சூப்பர் சிங்கர் ஆஜீத் காலிக் தனது இன்ஸ்டாகிராமில் புதிய போட்டோக்களை பதிவிட்டு தனது ரசிகர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் ஆஜித்துக்கு ஈகைத் திருநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். ஏகப்பட்ட சினிமா பிரபலங்களும் சின்னத்திரை நடிகர்களும் சமூக வலைதளங்களில் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X