நீங்கள் இல்லையென்றால் நாங்கள் இங்கு இல்லை… ஆசிரியர் தின வாழ்த்து கூறிய திரைப்பிரபலங்கள் !

சென்னை : முன்னாள் குடியரசுத் தலைவரான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஆரம்ப காலத்தில் ஆசிரியாக பணியாற்றி ஏராளமானோர் வாழ்வில் ஒளியேற்றினார். அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதியை ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆசிரியர் தினம் அன்று பலரும் தங்களது ஆசிரியர்களுக்கு நன்றிக்கடனாக வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தங்களது வாழ்க்கையில் மிகப்பெரிய உந்து சக்தியாக இருந்த ஆசிரியர்களுக்கும் கலையுலக குருவிற்கும் திரை பிரபலங்கள் பலரும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.

கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் , சமந்தா, பிரகாஷ்ராஜ், ஹரிஷ் கல்யாண், இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் உள்ளிட்ட பல திரைப்படங்கள் இன்று தங்களது வாழ்க்கையில் மிகப்பெரிய உந்து சக்தியாக இருந்து தன்னை வழிநடத்திய குருவுக்கு ஆசிரியர்தின வாழ்த்துக்களை கூறி நெகிழ்ந்து வருகின்றனர்.

ஆசிரியர் தின வாழ்த்து

ஆசிரியர் தின வாழ்த்து

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சிவகார்த்திகேயன் தயாரித்திருந்த கனா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான நடிகரும் இயக்குனருமான அருண்ராஜா காமராஜ் தனது கலையுலக குருவான இயக்குனர் நெல்சனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தனது ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

குரூப் போட்டோ

குரூப் போட்டோ

தமிழ் தெலுங்கு என முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா, தனது ஆசிரியர்களுடன் இருக்கும் குரூப் போட்டோ ஒன்றை சமூக வலை தளத்தில் பதிவிட்டு டீச்சர்ஸ் டே வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.

ஆசானுக்கு வாழ்த்துகள்

ஆசானுக்கு வாழ்த்துகள்

தமிழ் சினிமாவின் இளம் நாயகனாகவும் பெண்களின் கனவு கண்ணனாகவும் இருந்து வரும் நடிகர் ஹரீஷ் கல்யாண் "அறிவென்னும் விளக்கேற்றி அன்பென்னும் வழிகாட்டி எமது வாழ்க்கையில் ஏற்றம் பெற உதவிய ஆசான்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள்" என தமிழில் அற்புதமான கவிதை ஒன்றை எழுதி ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நெகிழ்ந்த பதிவு

நெகிழ்ந்த பதிவு

அதேபோல் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது தோழி கௌரி லங்கேஷ் மற்றும் கவிதா லங்கேஷ் உடனிருக்கும் பழைய புகைப்படத்தை பதிவிட்டு டீச்சர்ஸ் டே வாழ்த்துக்களுடன் கௌரியின் நினைவு நாளையும் நினைவுபடுத்தி நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார்.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

ஜிவி பிரகாஷ் குமார் நடித்த "புரூஸ் லீ" திரைப்படத்தை இயக்கிய இளம் இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் தனது கலையுலக குருவான இயக்குனர் பாண்டிராஜ்-க்கு ஆசிரியர் வாழ்த்துக்களை அவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தனது டீச்சர்ஸ் டே வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் இவர் நடிகர் அசோக் செல்வன் நடித்துவரும் "ஜாக்" என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X