தளபதி விஜயுடன் இணைவதில் மகிழ்ச்சி.. ரொம்ப ரொம்ப நன்றி.. மனம் திறந்த விஜய் சேதுபதி!
தளபதி விஜய் உடன் சேர்ந்து நடிப்பது சந்தோசம் அளிக்கிறது என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: தளபதி விஜய் உடன் சேர்ந்து நடிப்பது சந்தோசம் அளிக்கிறது என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடித்த பிகில் படம் இன்னும் 3 வாரங்களில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இன்னொரு பக்கம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தளபதி 64 படம் வேகமாக தயாராகி வருகிறது.
இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் தளபதி 64 படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

அதிகாரபூர்வ அறிவிப்பு
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்றுதான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றுதான் படக்குழு இதற்கான போஸ்டரை வெளியிட்டது. நேற்று இந்த அறிவிப்பு வெளியானதும் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்கள் இருவரும் இணையம் முழுக்க கொண்டாடி தீர்த்தனர்.

விஜய் சேதுபதி ஆதிக்கம்
இதில் படத்தின் முதல்பாதி முழுக்க விஜய் சேதுபதி ஆதிக்கம் செலுத்துவார். இரண்டாவது பாதியில் விஜய் ஆதிக்கம் செலுத்துவார். படத்தில் இரண்டு கதாபாத்திரங்களுக்கும் சமமான காட்சிகள், மாஸ் சீன்கள் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
தளபதி விஜய்
இந்த நிலையில் தளபதி விஜய் உடன் இணைவது பெரிய சந்தோசம் அளிக்கிறது. படக்குழுவிற்கும் இணை தயாரிப்பாளர் லலித் குமாருக்கும், லோகேஷ் கனகராஜுக்கும் நன்றி என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். அவரின் இந்த டிவிட் பெரிய வைரலாகி உள்ளது.

படம் எப்படி
இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. விஜய் சேதுபதி தான் நடிக்க இருந்த துக்ளக் தர்பார் படத்திற்கு பதிலாக இந்த படத்தின் கால் ஷீட்டை மாற்றி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











