பிறந்தநாளில் ட்விட்டரில் என்ட்ரி ஆன நடிகை ரேவதி... வாழ்த்துக்கள் மேடம்

சென்னை : நடிகை ரேவதி மண்வாசனை படம் மூலம் திரைத்துறையில் அறிமுகம் ஆனவர்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிப்படங்களில் நடித்தவர்.

தற்போதும் பிசியாக நடித்துவரும் ரேவதி இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

பிசியான நடிகை ரேவதி

பிசியான நடிகை ரேவதி

நடிகை ரேவதி கோலிவுட்டில் மண்வாசனை படம் மூலம் என்ட்ரி ஆனவர். தொடர்ந்து சிவாஜி, ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களில் இவர் நடித்துள்ளார். மித்ரூ மை ப்ரெண்ட் உள்ளிட்ட சில படங்களையும் இயக்கியுள்ளார்.

சிறப்பான நடிகை

சிறப்பான நடிகை

தற்போதும் பிசியான நடிகையாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். தற்போது நவரசா ஆந்தாலஜியில் ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். நடிகை ஜோதிகாவுடன் இவர் நடித்து வெளிவந்த ஜாக்பாட் மற்றும் குலேபகாவலி உள்ளிட்ட படங்கள் சிறப்பான வரவேற்பை பெற்றது.

ட்விட்டரில் இணைந்த ரேவதி

ட்விட்டரில் இணைந்த ரேவதி

இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி சமூக வலைதளங்களில் இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. சக நடிகர்கள், ரசிகர்கள் என வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்றைய தினம் தனது பிறந்தநாளையொட்டி ரேவதி ட்விட்டர் பக்கத்தில் இணைந்துள்ளார்.

பல்வேறு தரப்பினரும் வரவேற்பு

பல்வேறு தரப்பினரும் வரவேற்பு

இன்றைய தினம் ட்விட்டர் பக்கத்தில் இணைந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக ரேவதி தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். திரையில் தொடர்ந்து பரபரப்பாக செயல்பட்டு வரும் ரேவதி தற்போது ட்விட்டரிலும் பரபரப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கலாம்.


More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X