'ஏக் வில்லன்' ஹிட்: இயக்குனருக்கு ரேஞ்ச் ரோவர் காரை பரிசளித்த ஏக்தா கபூர்
மும்பை: தான் தயாரித்த ஏக் வில்லன் படம் ஹிட்டானதால் ஏக்தா கபூர் படத்தின் இயக்குனர் மோஹித் சூரிக்கு விலை உயர்ந்த ரேஞ்ச் ரோவர் காரை பரிசளித்துள்ளார்.
சித்தார்த் மல்ஹோத்ரா, ரித்தேஷ் தேஷ்முக், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் வெளியான ஏக் வில்லன் படம் ஹிட்டாகியுள்ளது. மோஹித் சூரி இயக்கிய படத்தை ஏக்தா கபூர் தயாரித்தார்.
இந்நிலையில் படம் ஹிட்டானதில் ஏக்தா குஷியாக உள்ளார்.

வாக்குறுதி
ஏக் வில்லன் படம் மட்டும் ரூ.100 கோடியை தாண்டி வசூல் செய்தால் உங்களுக்கு விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசளிப்பேன் என்று ஏக்தா மோஹித் சூரிக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.

ஹிட்
படம் ரூ.100 கோடி வசூலித்ததை அடுத்து ஏக்தா விலை உயர்ந்த் ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றை வாங்கி மோஹித்துக்கு பரிசளித்துள்ளார்.

அஜய் தேவ்கன்
ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை படத்தில் நடிக்கையில் அஜய் தேவ்கனுக்கு ஏக்தா கபூர் 1967 சொகுசு வின்டேஜ் காரை பரிசளித்தார்.

டர்ட்டி பிக்சர்
தி டர்ட்டி பிக்சர் படம் ஹிட்டாக வசனங்கள் தான் காரணம் என்று நினைத்த ஏக்தா வசனகர்த்தா ரஜத் அரோராவுக்கு ரூ. 15 லட்சத்திற்கு காசோலை அளித்து கார் ஒன்றை வாங்கிக் கொள்ளுமாறு கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











